டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் |

கொரோனா தாக்கம் துவங்கிய கடந்த இரண்டு ஆண்டுகளின்போது தமிழகத்தில் கூட ஓரளவு படப்படிப்புகள், தியேட்டர் வெளியீடுகள் என நிலைமை சமாளிக்கத்தக்கதாக இருந்தது. ஆனால் கேரளாவில் லாக்டவுன் நிபந்தனைகள் கடுமையாக அமல்படுத்தப்பட்டதால் தமிழகம், ஆந்திராவில் பட வெளியீடுகள் துவங்கிய பின்னரும் கூட அதற்கடுத்த சில மாதங்கள் வரை கேரளாவில் தியேட்டர்கள் இயங்கத் துவங்கவில்லை. அதன் பின்னர் கடந்த சில மாதங்களாகத்தான் நிலைமை சீராகி உள்ளது..
அந்த வகையில் கடந்த ஜூலை 7ஆம் தேதி பிரித்விராஜ் நடிப்பில் ஷாஜி கைலாஷ் இயக்கத்தில் வெளியான கடுவா திரைப்படம் வெற்றிகரமான படமாக அமைந்து விநியோகஸ்தர்களுக்கும் தியேட்டர் உரிமையாளர்களுக்கும் மிகப்பெரிய லாபத்தை கொடுத்துள்ளது. கிட்டத்தட்ட படம் வெளியாகி 25 நாட்கள் கடந்துள்ள நிலையில் இந்த படம் 50 கோடி வசூல் கிளப்பில் இணைந்துள்ளது.
இன்னும் பல தியேட்டர்களில் இந்த படம் ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கிறது. அதேபோல சமீபத்தில் சுரேஷ்கோபி நடிப்பில் வெளியான பாப்பன் திரைப்படமும் தியேட்டர்களுக்கு ரசிகர்கள் கூட்டத்தை வரவழைத்துள்ளது. அந்தவகையில் மலையாள திரை உலகம் தற்போது மீண்டும் பார்முக்கு திரும்பி உள்ளது என்று சொல்லலாம்.




