'வேவ்ஸ்' ஓ.டி.டி., தளம் : பிரசார் பாரதி துவக்கம் | நவ.26ம் தேதியில் விடுதலை-2 படத்தின் இசை வெளியீட்டு விழா | தெலுங்கில் அறிமுகமாகும் மமிதா பைஜூ | திருமணத்திற்கு தயாராகும் தமன்னா | திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்த சந்தானம் | நடிகை சீதா வீட்டில் நகை திருட்டு : போலீசில் புகார் | சமந்தா சொல்வது உண்மைதான் : அர்ஜுன் கபூர் ஒப்புதல் | சர்ச்சைகளை நீர்த்துப்போக செய்யும் விதமாக தயாராகிறதா மோகன்லால் - மம்முட்டி படம்? | அபிநட்சத்திரா நடிக்கும் அன்னம் தொடரின் புரோமோ ரிலீஸ் | கார்த்திகை தீபம் சீரியலிலிருந்து விலகிய அயுப் |
பிரபல மலையாள நடிகை ஒருவர் கடந்த 2017ல் படப்பிடிப்பிலிருந்து திரும்பியபோது காரில் கடத்தப்பட்டு பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானார். கடத்தியவர்கள் அதை வீடியோவாகவும் பதிவு செய்தார்கள் என குற்றம் சாட்டப்பட்டு, நடிகர் திலீப் உள்ளிட்ட 10 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் திலீப் மூன்று மாத சிறைவாசத்திற்கு பிறகு ஜாமினில் வெளிவந்தார். இது தவிர திலீப்பின் நண்பராக இருந்து அவருக்கு எதிராக திரும்பிய இயக்குனர் பாலச்சந்திர குமார் என்பவர், திலீப் விசாரணை அதிகாரிகளை கொல்ல முயற்சித்தார் என்றும் பாதிக்கப்பட்ட நடிகையின் வீடியோ காட்சிகளை தனது மொபைல் போனில் பார்த்தார் என்றும் கடந்த வருடம் போலீசில் புகார் கொடுக்க அந்த வழக்கும் தற்போது இன்னொருபக்கம் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு ஓய்வுபெற்ற கேரள டிஜிபி ஸ்ரீகலா என்பவர் திலீப் ஓர் அப்பாவி என்றும், அவரை விட அதிக சக்தி வாய்ந்தவர்கள் அவரை இந்த வழக்கில் சிக்க வைத்துள்ளனர் என்றும் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். இதை உறுதிப்படுத்தும் விதமாக தற்போது உச்சநீதிமன்றத்தில் திடீர் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார் திலீப்.
அதில், தனது முன்னாள் மனைவி, பாதிக்கப்பட்ட நடிகை மற்றும் டிஜிபி ரேங்க்கில் உள்ள ஒரு அதிகாரி ஆகிய மூவர் மீதும் குற்றம் சாட்டியுள்ள திலீப், இவர்கள் தன்னை களங்கப்படுத்தும் விதமாக தன்னை ஒரு வலையில் சிக்கவைக்க முயற்சி செய்து வருகின்றனர் என்றும் அதனாலேயே கிழமை நீதிமன்றத்தில் வழக்கை இழுத்தடித்து வருகின்றனர் என்றும் குறிப்பிட்டுள்ளார் திலீப். இந்த வழக்கை குறிப்பிட்ட காலக்கெடு விதித்து அதற்குள் முடிக்க வேண்டும் என கீழமை நீதிமன்றத்திற்கு உத்தரவிட வேண்டும் என்பதாக உச்ச நீதிமன்றத்திற்கு அத மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார்.