இளம் நடிகருடன் காதலா? - கோட் நடிகை விளக்கம் | ஏஆர் ரஹ்மான் பிரிவுக்கும், மோகினி டே பிரிவுக்கும் சம்பந்தம் இல்லை: சாய்ரா பானு வழக்கறிஞர் விளக்கம் | என் மகளை மீட்டு தந்தது செட்டிக்குளங்கரா தேவி தான் : நயன்தாரா அம்மா உருக்கம் | மலையாள வாரிசு வில்லன் நடிகர் மேகநாதன் மறைவு | கிஸ் படத்திலிருந்து அனிரூத் விலகலா? | சம்பந்தி இது சரியில்லை : ‛ராஜாகிளி' பட விழாவில் அர்ஜூன் கலாட்டா | ராம் பொதினேனிக்கு ஜோடியான பாக்யஸ்ரீ போர்ஸ் | சிவகார்த்திகேயனுக்கு வில்லனா? மறுப்பு தெரிவித்த விஷால் | ஹாலிவுட் மியூசிக் மீடியா விருது: ஆடுஜீவிதம் பின்னணி இசைக்காக வென்றார் ஏ.ஆர்.ரஹ்மான் | விஜய் 69வது படத்தில் இணையும் வரலட்சுமி |
கடந்த 2017ல் கேரளாவில் பிரபல நடிகை ஒருவர் காரில் கடத்தப்பட்டு பாலியல் ரீதியாக சித்ரவதைக்கு ஆளானார். அந்த நிகழ்வு வீடியோவாகவும் எடுக்கப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டு அது தொடர்பாக 10 பேர் கைதாகினர். இதில் முதல் குற்றவாளியாக பல்சர் சுனில் என்பவனும் எட்டாவது குற்றவாளியாக நடிகர் திலீப்பும் சேர்க்கப்பட்டனர். 3 மாத சிறைத் தண்டனை அனுபவித்து பின் ஜாமினில் வெளியே வந்தார் திலீப். தற்போது இந்த வழக்கு இறுதிக்கட்டத்தை எட்டிக்கொண்டிருக்கிறது.
இந்த நிலையில் கேரளாவின் முதல் பெண் டிஜிபியும் ஓய்வுபெற்ற முன்னாள் சிறைத்துறை டிஜிபியுமான ஸ்ரீகலா என்பவர் நடிகர் திலீப் ஒரு அப்பாவி என்றும் இந்த வழக்கில் வேண்டுமென்றே சிக்கவைக்கப்பட்டுள்ளார் என்றும் சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.
மேலும் அவர் கூறும்போது, “இந்த வழக்கின் முதல் குற்றவாளியான பல்சர் சுனில் என்பவனும் அவனது கேங்கும் இதுபோன்று இன்னும் பல நடிகைகளிடம் அத்துமீறி தாக்குதல் நடத்தி அவற்றை வீடியோவாக எடுத்து மிரட்டிய நிகழ்வுகள் நடந்துள்ளன.. அவை வெளியே தெரியவில்லை” என்கிற ஒரு புதிய தகவலையும் கூறினார். இந்த நிலையில் முன்னாள் டிஜிபி ஸ்ரீகலா மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பேராசிரியர் ஒருவர் திருச்சூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரில், “டிஜிபி ஸ்ரீகலா பொறுப்பில் இருந்தபோது அவருக்கு பல்சர் சுனில் பற்றியும் அவன் ஏற்கனவே பல நடிகைகளிடம் இதுபோன்று நடந்துள்ளதும் தெரிந்து இருக்கிறது. ஆனால் அவர் ஏன் அது குறித்து நடவடிக்கை எடுக்கும் முயற்சியில் இறங்கவில்லை?” என கேள்வி எழுப்பியுள்ளதுடன் இது தொடர்பாக அவர் மீது விசாரணை நடத்த வேண்டும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதைதொடர்ந்து கேரள போலீசார் முன்னாள் டிஜிபி ஸ்ரீகலாவிடம் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர் என்கிற தகவலும் வெளியாகி உள்ளது.