ரஜினியின் 'ஜெயிலர்-2' படத்தில் இணைந்த ஹிந்தி நடிகை அபேக்ஷா போர்வல்! | 15 கிலோ எடை குறைத்த கிரேஸ் ஆண்டனி! | கோவா சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படும் அமரன்! | சூர்யாவின் 'கருப்பு' படத்தின் கிளைமாக்ஸை மாற்றும் ஆர்.ஜே.பாலாஜி! | விக்னேஷ் சிவனை தொடர்ந்து ரோல்ஸ் ராய்ஸ் ஸ்பெக்டர் எலக்ட்ரிக் கார் வாங்கிய அட்லி! | 'பைசன் முதல் தி ஜூராசிக் வேர்ல்ட்' வரை..... இந்த வார ஓடிடி ரிலீஸ்..! | 'தி பேமிலி மேன் 3' ரிலீஸ்: பதட்டமாகவும், சந்தோஷமாகவும் இருக்கு: மனோஜ் பாஜ்பாய் | என் பெயரில் வரும் அழைப்புகள், மெசேஜ்கள் போலியானவை: தனுஷ் மானேஜர் அறிக்கை | பெண்களை இழிவாக பேசும் இயக்குனர்: திவ்யபாரதி புகார் | 'ஆரோமலே' படத்திற்கு எதிராக வழக்கு |

பிரபல மலையாள திரைப்பட இயக்குநர் கே.என்.சசிதரன். 72 வயதான சசிதரன் சினிமாவில் இருந்து விலகி கொச்சியில் உள்ள எடப்பள்ளியில் குடும்பத்தினருடன் வசித்து வந்தார். நேற்று முன்தினம் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார். அவரது மறைவுக்கு மலையாள திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். சசிதரனுக்கு வீனா என்ற மனைவியும் ரித்து என்ற மகளும் முகில் என்ற மகனும் உள்ளனர்.
சசிதரன் புனே திரைப்பட கல்லூரியில் சினிமா கற்று, 1984ம் ஆண்டு அக்கரே என்ற படம் மூலம் இயக்குநராக அறிமுகமானார். இந்த படத்தில் மம்முட்டி மோகன்லால் இணைந்து நடித்தனர். மிகப்பெரிய வெற்றி பெற்றது. அதன்பிறகு பல படங்களை இயக்கியவர் கடைசியாக 'நாயனா' என்ற படத்தை இயக்கி இருந்தார். 2014ம் ஆண்டு வெளியான இதில் மியா ஜார்ஜ், அனுபம் கெர் உட்பட பலர் நடித்திருந்தனர்.




