போலீஸாக நடிக்கும் கவுதம் ராம் கார்த்திக் | கண்ணப்பா படத்திற்கு அடித்த ஜாக்பாட் | அஜித் படத்தை தயாரிக்கும் அஜித் ரசிகர் | டேட்டிங் ஆப் சிக்கல்களை பேசவரும் 'நீ பாரெவர்' | மலையாள இயக்குனர் மீது பாலியல் புகார்: நடிகை கைது | புராணப்படத்தில் நடிக்கும் சமுத்திரகனி | 'ஹரிஹர வீர மல்லு': அவுரங்கசீப் கேரக்டரை மாற்றிய இயக்குனர் | பிளாஷ்பேக்: 3டி படத்தில் நடிக்க மறுத்த ரஜினிகாந்த் | பிளாஷ்பேக்: பெரும் தோல்வி அடைந்த பிரம்மாண்ட படம் | 'கேம் சேஞ்ஜர்' கமெண்ட்: மன்னிப்பு கேட்ட தயாரிப்பாளர் |
கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்பு பிரபல மலையாள நடிகை கடத்தப்பட்டு காரில் பாலியல் ரீதியாக சித்தரவதை செய்யப்பட்ட வழக்கில் நடிகர் திலீப் எட்டாவது குற்றவாளியாக சேர்க்கப்பட்டு கைதானார். மூன்று மாத சிறைவாசத்திற்கு பிறகு ஜாமீனில் வெளியே வந்தார். இந்த வழக்கு அவ்வப்போது பரபரப்பாக நடப்பதும் பின்பு அப்படியே அமுக்கி விடுவதும் கடந்த வருடங்களில் வாடிக்கையாகவே இருந்து வருகிறது. இந்த நிலையில் தற்போது இந்த வழக்கை விரைந்து முடிக்க நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
அதேசமயம் தற்போது இந்த வழக்கை விசாரிக்கும் விசாரணை அதிகாரி இந்த வழக்கில் அலட்சியப் போக்குடன் செயல்படுவதாகவும் மேலும் இதில் அரசியல் குறுக்கீடுகள் ஏற்பட்டுள்ளதாகவும் பாதிக்கப்பட்ட நடிகை சமீபத்தில் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார். மேலும் அந்த மனுவில் ஒரு பெண் நீதிபதியை குறிப்பிட்டு இந்த வழக்கு விசாரணையில் அவர் பாரபட்சமாக நடந்து கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும் நடிகர் திலீப் தனது அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி விசாரணையின் போக்கை மாற்ற முயற்சிப்பதாகவும் அதனால் தற்போது விசாரணை தடம்புரண்டு செல்வதாகவும் அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார் பாதிக்கப்பட்ட நடிகை.