பிளாஷ்பேக்: பி யு சின்னப்பா திரைப்படத்தில் பிரியமுடன் எம் ஜி ஆருக்கு வாய்ப்பளித்த இயக்குநர் கிருஷ்ணன் | ஏப்ரல் 10 கருப்பு ரிலீசா... : ஆர்.ஜே பாலாஜி தந்த அப்டேட் | மீண்டும் ஆஸ்கர் மேடையில் பிரியங்கா சோப்ரா | விடியலாக முழு வீடியோ வரும் : திரிஷாவுக்கு வாழ்த்துகள் கூறி பார்த்திபன் சஸ்பென்ஸ் | என் மீது திட்டமிட்டு தாக்குதல் : பிரியங்கா மோகன் | சம்பளத்தை குறைக்காத அஜித்: இன்னமும் சிக்காத தயாரிப்பாளர்கள் | மீடியாவை சந்தித்து பேசுகிறார் சங்கீதா? | 10 நாளில் 50 கோடி வசூலித்த ‛தாய் கிழவி' | சன்னி தியோலின் லாகூர் 1947 பட டைட்டில் மாற்றம் ? | தலைவா படத்தில் பிரச்னைக்குரிய வார்த்தைகளை சேர்த்தது யார்? : சஸ்பென்ஸ் உடைத்த இயக்குனர் விஜய் |

தெலுங்கில் கடந்த 2014ம் ஆண்டு வெளியான படம் மனம். இந்தப்படத்தில் நாகேஸ்வர ராவ், நாகார்ஜுனா, நாக சைதன்யா என ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று தலைமுறை நடிகர்கள் நடித்திருந்தார்கள். இந்த படத்தில் நாகசைதன்யா, சமந்தா இருவரும் இரண்டு வேடங்களில் நடித்திருந்தனர். விக்ரம் குமார் படத்தை இயக்கியிருந்தார்.
இப்படம் வெளியாகி 8 ஆண்டுகள் ஆனதையடுத்து இயக்குனர் விக்ரம் குமாருடன் எடுத்துக் கொண்ட ஒரு புகைப்படத்தை பகிர்ந்த நாக சைதான்யா, ‛மனம் படத்திற்கு பிறகு எட்டு ஆண்டுகள் கழித்து மீண்டும் விக்ரம்குமார் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிப்பது மிகுந்த மகிழ்ச்சி அடைவதாக' தெரிவித்துள்ளார். தற்போது விக்ரம் குமார் இயக்கும் தேங்க்யூ என்ற படத்தில் நாக சைதன்யா நடிக்க அவருக்கு ஜோடியாக ராஷி கண்ணா நடிக்கிறார்.