இந்த முட்டாள் யார் : ஸ்ரேயா கோபம் | பெண் குழந்தைக்கு அப்பாவான பிரேம்ஜி அமரன் | டிச., 8ல் துவங்கும் சூர்யா 47 பட படப்பிடிப்பு | தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் கடும் போட்டி | ஏகனுக்கு ஜோடியாக இரண்டு நாயகிகள் | நலமாக இருந்தால்தான் நல்லதைத் தர முடியும்: தீபிகா படுகோனே | ஒரு வாரம் தள்ளிப்போகும் ‛வா வாத்தியார்' | தனுஷ், அவரது மேலாளர் பற்றிய சர்ச்சை : முற்றுப்புள்ளி வைத்த மான்யா ஆனந்த் | 9 படங்களில் நடிக்கும் நயன்தாரா : இந்தியாவிலே இவர்தான் டாப் | ரீ ரிலீஸ் படங்கள் முடிவுக்கு வருகிறதா? |

விஷால் நடித்த 'திமிரு' படத்தில் ஸ்ரேயா ரெட்டியின் கையாளாக முக்கிய வேடத்தில் நடித்தவர் விநாயகன்.. ஆனால் ஓரளவு வரவேற்பு கிடைத்தாலும், தமிழில் பெரிய அளவில் படங்களில் நடிக்காமல், மலையாள சினிமாவில் மட்டும் அவ்வப்போது நடித்து வருகிறார். குறிப்பாக மலையாளத்தில் வெளியான 'கம்மட்டிப்பாடம்' படத்தின் மூலம் குணச்சித்திர நடிகராகவும் மாறினார்.
இந்தநிலையில் நடிகை நவ்யா நாயர் பல வருட இடைவெளிக்கு பிறகு நடித்து ரிலீஸாகியுள்ள 'ஒருத்தீ' என்கிற படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார் விநாயகன்.. இந்தப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சமீபத்தில் நடைபெற்றது. இதில் இயக்குனர் வி.கே.பிரகாஷ், நவ்யா நாயர் ஆகியோருடன் விநாயகனும் கலந்து கொண்டார்.
கடந்த மூன்று வருடங்களுக்கு முன் மீ டூ விவாகரத்தில் சிக்கி, போலீசாரால் கைது செய்யப்பட்டு, பின் ஜாமீனில் வெளியே வந்தார் விநாயகன். இந்த பத்திரிகையாளர் சந்திப்பில் அவரது மீ டூ விவகாரம் குறித்து நிருபர் ஒருவர் விநாயகனிடம் கேள்வி எழுப்பினார்.
உடனே டென்சனான விநாயகன், “மீ டூன்னா என்ன..? எனக்கு விளக்கம் சொல்லுங்க.. கல்யாணத்துக்கு முன்னாடி செக்ஸ் வச்சுக்கிட்டவங்க இங்க யாராவது இருக்கீங்களா..? நான் பத்து பேரோட செக்ஸ் வச்சுக்கிட்டேன்.. ஆனா அவங்க அனுமதியோட தான் அதை செய்தேன்” என சம்பந்தா சம்பந்தமில்லாமல் பேச ஆரம்பித்தார்.
நடிகை நவ்யா நாயரோ என்னடா இது என்கிற மாதிரி அவஸ்தையில் நெளிந்தவர், ஒருகட்டத்தில் விநாயகனிடம் போதும் என்பது போல சைகை செய்து அவரிடமிருந்து மைக்கை வாங்க முயற்சித்தார். ஆனாலும் விநாயகன் ரொம்பவே சீரியஸாக மீண்டும் அதுபற்றியே பேசினார்.
படம் பற்றிய கேள்விகளை கேட்காமல் சில வருடங்களுக்கு முன் ஒரு நடிகருக்கு ஏற்பட்ட அவமான நிகழ்வு குறித்து இப்போது கேட்ட நிருபரை குறை சொல்வதா..? அல்லது எந்த இடத்தில் எப்படி பேச வேண்டும் என தெரியாத விநாயகனை குறை சொல்வதா..?