பால்டப்பாவை இயக்கும் விஜய் மில்டன் | சாய் தன்ஷிகாவை திருமணம் செய்கிறார் நடிகர் விஷால்.? | கடந்தவாரம் வெளியான படங்களுக்கு வரவேற்பு எப்படி | பிளாஷ்பேக்: பொன்விழா ஆண்டில் எம்ஜிஆர்.,ன் “நினைத்ததை முடிப்பவன்” | 'ஜெயிலர் 2' படப்பிடிப்பு தளத்தில் ரஜினியை சந்தித்த வீரதீர சூரன் வில்லன் நடிகர் | சூர்யா 46 இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ்குமார் | ஹைதராபாத்தில் நடந்த சூர்யாவின் அடுத்த பட பூஜை | 'தக் லைப்' டிரைலர் : 24 மணி நேர சாதனை என்ன? | 'ரெட்ரோ' 235 கோடி வசூல்: ஷாக் ஆன ரசிகர்கள் - உண்மை என்ன? | ஆறு மாத இடைவெளியில் அழகாக யோசிக்கும் ஆதிக் |
மலையாளத்தில் நிவின்பாலி கதாநாயகனாக நடித்து வரும் படம் 'படவேட்டு'. இந்த படத்தில் அதிதி பாலன் கதாநாயகியாக நடித்துள்ளார். பிரபல மலையாள நடிகர் சன்னி வெய்ன் தயாரித்துள்ள இந்தப்படத்தை லிஜூ கிருஷ்ணா என்பவர் இயக்கி வந்தார்.. இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு இயக்குனர் லிஜூ கிருஷ்ணா மீது துணை நடிகை ஒருவர் தன்னிடம் பாலியல் அத்துமீறல் செய்ததாக போலீசில் புகார் அளித்ததை தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார். அதை தொடர்ந்து படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தது.
இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.. படப்பிடிப்பு தளத்தில் தயாரிப்பாளர் சன்னி வெய்ன் மைக்கில் படப்பிடிப்பு முடிவடைந்தது என அறிவிக்க அங்குள்ளவர்கள் சந்தோசத்தில் கைதட்டுகிறார்கள்.. இதுகுறித்த வீடியோ ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.
மலையாள திரையுலகில் உள்ள பெண்கள் நல அமைப்பினர் இயக்குனர் லிஜூ கிருஷ்ணாவுக்கு எதிராக குரல் கொடுத்து வருவதால், இனி அவரை வைத்து படத்தை தொடர முடியாத சூழல் உருவாகியுள்ளது., அதனால் இயக்குனர் லிஜூ கிருஷ்ணா இல்லாமலேயே துணை, இணை இயக்குனர்களின் உதவியுடன் இந்த படத்தின் மீதி காட்சிகளை படமாக்கி முடித்து உள்ளார்கள் என்று சொல்லப்படுகிறது.