ஹீரோயின் ஆன 'பிக்பாஸ்' ஜனனி | பிளாஷ்பேக்: திருமண நாளில் படங்களை வெளியிட்ட கே.பாலாஜி | பிளாஷ்பேக்: மின்னி மறைந்த ஸ்ரீராம் | ஹிந்தியில் படத்துக்கு வரவேற்பு: புனேவுக்கு நடிகர் தனுஷ் விசிட் | தயாரிப்பாளர் ஆனார் 'டாடா' இயக்குனர்: கவுதம் ராம் கார்த்திக் அதில் ஹீரோ | 10 ஆயிரம் கண்டெயினர் யார்டில் படமாக்கப்பட்ட 'அனலி' | 'மகாசேனா'வில் அம்மாவாக நடிக்கும் சிருஷ்டி டாங்கே | சிவகார்த்திகேயனை தொடர்ந்து சிம்புவுக்கு கதை தயார் செய்த ஏ.ஆர்.முருகதாஸ்! | பிளாஷ்பேக்: 'நாட்டியப் பேரொளி' பத்மினியை நாடறியும் நாயகியாக்கிய “மணமகள்” | கிரிக்கெட் வீரருடன் டேட்டிங் செய்யும் மிருணாள் தாக்கூர்! |

தெலுங்கு நடிகை சரயுராய். கர்பூல், 3 ரோசஸ், தொல்லி பரிச்சயம் உள்ளபட பல படங்களில் நடித்துள்ளார். தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானார். அதிக பட வாய்ப்பு இல்லாத சரயுராய் சமூக வலைத்தளத்தில் பிசியாக இயங்கி வருகிறார்.
இவர் தனியாக ஒரு யு டியூப் சேனலையும் நடத்தி வருகிறார். அந்த சேனலில் நாட்டு நடப்புகள் பற்றி தனது கருத்தை வெளியிட்டு வருகிறார். பரபரப்புக்காகவும் சேனல் பார்வையாளர்களை அதிகப்படுத்தவும் அவ்வப்போது வில்லங்கமான சில விஷயங்களையும் பேசுவார். அந்த வரிசையில் சமீபத்தில் கடவுள்களையும், கடவுளை வணங்குகிறவர்களையும் மோசமாக கிண்டல் செய்து ஒரு வீடியோ வெளியிட்டிருந்தார். இதை தொடர்ந்து அவர்மீது பல்வேறு அமைப்பினர் புகார் கூறி வந்தனர்.
குறிப்பாக தெலுங்கானா விஷ்வ இந்து பரிஷத் தலைவர் ஐப்புரி அசோக் ஐதராபாத் பஞ்சாரா ஹில்ஸ் போலீசில் புகார் செய்தார். இதை தொடர்ந்து போலீசார் சரயுராயை கைது செய்துள்ளனர். அவர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.




