எனக்கு மரணமும் நிகழலாம் - பாலா உருக்கம் | அடம்பிடித்த சிறுமி : வீடியோ காலில் வந்து இன்ப அதிர்ச்சி தந்த விஜய் | நீச்சல் குளத்தில் போட்டோசூட் நடத்திய ஷிவானி | தங்கலான் படப்பிடிப்பில் மீண்டும் இணைந்த விக்ரம் | மாறிமாறி வாழ்த்து தெரிவித்துக் கொண்ட கீர்த்தி சுரேஷ் - சூரி | லியோ அடுத்த அப்டேட் எப்போது வெளியாகும்? | போனில் மட்டும் பேசு : பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகைக்கு டார்ச்சர் கொடுத்த இயக்குநர் | எதிர்நீச்சல் தொடரில் 10 ஆண்டுகள் கூட நடிப்பேன் : மதுமிதா மகிழ்ச்சி | தீபிகா படுகோனின் ஜிம் மேட்டாக மாறிய ஐஸ்வர்யா மேனன் | 17 வருடங்களுக்கு பிறகு 2ம் பாகத்திற்காக இணைந்த சுரேஷ் கோபி - ஜெயராஜ் |
மம்முட்டி நடிப்பில் கடந்த முப்பது வருடங்களில் நான்கு பாகங்களாக வெளியாகி வரவேற்பை பெற்ற படம் ஒரு சிபிஐ டைரி குறிப்பு. தற்போது இந்தப்படத்தின் ஐந்தாம் பாகத்திற்கான படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. கே.மது இயக்கிவரும் இந்தப்படத்தில் கனிகா முக்கிய வேடத்தில் நடிக்கிறார். படப்பிடிப்பு தளத்தில் இயக்குனர் மதுவுடன் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு இதை உறுதிப்படுத்தி உள்ளார் கனிகா.
மஞ்சு வாரியரை போலவே ஹவ் ஓல்டு ஆர் யூ படத்தின் மூலம் தனது இரண்டாவது இன்னிங்ஸை துவங்கிய கனிகா, தற்போது மலையாளத்தில் மோகன்லால், மம்முட்டி, சுரேஷ்கோபி உள்ளிட்ட சீனியர் ஹீரோக்களின் படங்களில் தவறாமல் இடம்பெற்று வருகிறார் சமீபத்தில் வெளியான மோகன்லாலின் ப்ரோ டாடி படத்தில் கல்யாணி பிரியதர்ஷனுக்கு அம்மாவாக நடித்திருந்தார் கனிகா. சுரேஷ் கோபிக்கு ஜோடியாக இவர் நடித்துள்ள பாப்பன் என்கிற படம் விரைவில் ரிலீஸாக இருக்கிறது.