ராம் சரண் 16வது பட படப்பிடிப்பு மைசூரில் துவக்கம் | அல்லு அர்ஜுனிடம் இயக்குனர் நெல்சன் வைத்த கோரிக்கை | ரிஷப் ஷெட்டியின் இரண்டாவது தெலுங்கு படம்! | பெண்கள் பாதுகாப்பு - விஜய் வெளியிட்ட அறிக்கை | பேபி ஜான் - கவர்ச்சி புயலாக உருவெடுத்த கீர்த்தி சுரேஷ் | சீனாவில் மஹாராஜா ரிலீஸ் : முன்பதிவு எப்படி | காதல் படங்கள் குறைந்து விட்டது : கார்த்தி வருத்தம் | எனது சாதனைகள் தமிழ் மண்ணுக்கு சொந்தம் : அல்லு அர்ஜூன் நெகிழ்ச்சி | பிளாஷ்பேக்: தெலுங்கில் 3 விருதுகளை வென்றாலும் தமிழில் அடிவாங்கிய கண்ணகி | பிளாஷ்பேக்: வெள்ளி விழா கொண்டாடிய புராண புனைவு கதை |
இந்திய திரையுலகின் நைட்டிங்கேல் என அழைக்கப்பட்ட பிரபல பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் இரண்டு தினங்களுக்கு முன் காலமானார். தென்னிந்திய மொழிகளில் அவர் குறைந்த அளவு பாடல்களே பாடி இருப்பதால், அவருடன் பணியாற்றும் பாக்கியம் கிடைத்த திரையுலக பிரபலங்கள் பலரும் லதா மங்கேஷ்கருடனான தங்களது நினைவுகளை பகிர்ந்து கொண்டு வருகின்றனர்.
அந்தவகையில் தெலுங்கில் லதா மங்கேஷ்கர் இரண்டே இரண்டு பாடல்களை மட்டுமே பாடியுள்ளார், 1955ல் நாகேஸ்வரராவ் நடித்த சந்தானம் என்கிற படத்தில் பாடியவர், அதன்பிறகு 33 வருடங்கள் கழித்து மீண்டும் 1988ல் நாகார்ஜுனா நடித்த ஆக்ரி போராட்டம் என்கிற படத்தில் தான் பாடினார். இப்படி தெலுங்கில் அவர் பாடிய இரண்டு பாடல்களும் தனக்கும் தனது தந்தையின் படங்களுக்கு மட்டுமே என்கிற தகவலை நெகிழ்ச்சியுடன் நினைவு கூர்ந்துள்ளார் நாகார்ஜுனா.