ரீ-ரிலீஸில் சச்சின் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு | விவாகரத்து நெருங்கிவிட்டது என பதிவு போட்ட ரசிகருக்கு சோனாக்ஷி கொடுத்த பதிலடி | ரயில் ஜன்னல் கம்பி வழியாக மாளவிகா மோகனனிடம் முத்தம் கேட்ட மர்ம நபர் | ரெட்ரோ படத்தின் டிரைலரை உருவாக்கிய அல்போன்ஸ் புத்ரன் | கேரள அரசு விருதை கட்டி அணைத்தபடி தூங்கிய பிரேமலு நடிகர் : வைரலாகும் புகைப்படம் | போதை பொருள் வழக்கு : நடிகர் சைன் டாம் சாக்கோ கைது | ரெட்ரோ டிரைலர் : விதவிதமாய் 'குக்' செய்துள்ள கார்த்திக் சுப்பராஜ் | அஜித் பிறந்த நாளில் 'வீரம்' மறு வெளியீடு | உடல்நலக்குறைவு எதனால் ஏற்பட்டது : ஏ.ஆர்.ரஹ்மான் வெளியிட்ட தகவல் | 'மணி ஹெய்ஸ்ட்' பாதிப்பில் உருவானது கேங்கர்ஸ்: சுந்தர்.சி |
கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு மலையாளத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற படம் புலி முருகன். இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது இயக்குனர் வைசாக்கும் மோகன்லாலும் மீண்டும் மான்ஸ்டர் என்கிற படத்திற்காக இணைந்துள்ளனர். சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்கியுள்ளது. இந்த நிலையில் இந்த படத்தின் கதாநாயகியாக லட்சுமி மஞ்சு நடிக்கிறார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தெலுங்கு சீனியர் நடிகர் மோகன் பாபுவின் மகளும் நடிகையுமான லட்சுமி மஞ்சு செலக்டிவ் ஆக சில படங்களில் மட்டுமே நடித்துள்ளார். கடந்த சில வருடங்களுக்கு முன்பு தமிழில் ஜோதிகாவுடன் இணைந்து காற்றின் மொழி என்கிற படத்தில் நடித்தார் லட்சுமி மஞ்சு. இந்தநிலையில் மோகன்லாலுக்கு ஜோடியாக மான்ஸ்டர் படம் மூலம் மலையாள திரையுலகிலும் அடியெடுத்து வைக்கிறார். கடந்த ஆகஸ்ட் மாதம் படப்பிடிப்பிற்காக ஐதராபாத் சென்றிருந்த மோகன்லாலை அழைத்து தனது வீட்டில் விருந்து கொடுத்திருந்தார் மோகன்பாபு. அப்போது அவருடன் எடுத்து கொண்ட புகைப்படத்தையும் பகிர்ந்து கொண்டு இந்த தகவலை தனது சோசியல் மீடியா பக்கத்தில் தெரிவித்துள்ளார் லட்சுமி மஞ்சு.