அவதூறு பரப்பாதீங்க; ரஹ்மான் அற்புதமானவர் - சாய்ரா பானு ஆடியோ வெளியீடு | சூர்யா 44வது படத்தின் புரமோஷனை தொடங்கிய கார்த்திக் சுப்பராஜ் | விவசாயிகளுக்கு விருந்து கொடுத்த நடிகர் விஜய்! | சொர்க்கவாசல் வெளியான பிறகு கைதி-2 கதையை மாற்றுவேன்! -லோகேஷ் கனகராஜ் | தைரியம் காட்டும் அரசியல்வாதி விஜய்: மடோனா சிறப்பு பேட்டி | வெல்லும் வரை காத்திரு: நடிகை குயின்சி ஸ்டான்லி | சிவராஜ் குமாரின் ‛பைரதி ரணங்கள்' நவ. 29ல் தமிழில் ரிலீஸ் | ‛குட் பேட் அக்லி' படத்தை விட்டு வெளியேறிய தேவி ஸ்ரீ பிரசாத்! | தனுஷ் படத்தில் இணைந்த பவி டீச்சர்! | நான் உயிரோடு உள்ளவரை புதுப்பேட்டை 2 முயற்சி தொடரும் - செல்வராகவன்! |
மலையாள சினிமாவின் முன்னணி குணசித்ர நடிகர் ஜோஜூ ஜார்ஜ். இவர் நடித்த ஜோசப் படம் பெரிய வெற்றி பெற்றது. இந்த படம் தமிழில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. தனுஷ் நடித்த ஜெகமே தந்திரம் படத்தில் வில்லனாக நடித்திருந்தார். மாஸ்க் அணியாமல் பொதுவெளியில் நடமாடியதாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து, கேரள காங்கிரஸ் கட்சி சார்பில் மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்தப்பட்டது. மாரத் பகுதி தேசிய நெடுஞ்சாலையில் மறியல் போராட்டம் நடந்தபோது, அந்த வழியாக காரில் சென்ற ஜோஜூ ஜார்ஜூக்கும், காங்கிரஸ் தொண்டர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஜோஜூ ஜார்ஜின் கார் கண்ணாடியை அடித்து நொறுக்கப்பட்டது.
இதை தொடர்ந்து ஜோஜு ஜார்ஜ் கொடுத்த புகாரின் பேரில் காங்கிரஸ் நிர்வாகிகள் சிலர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதை தொடர்ந்து இளைஞர் காங்கிரஸ் மாநில செயலாளர் பி.ஒய்.ஷாஜகான் அளித்த புகார் அடிப்படையில், மாஸ்க் அணியாமல் பொது இடத்தில் மக்களிடம் பேசியதற்காக ஜோஜூ ஜார்ஜ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இரு வழக்குகளையும் தனித்தனியாக நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர்.
ஜோஜு ஜார்ஜ் மீதான வழக்கில் அவர் ஒரு முறை கோர்ட்டுக்கு வந்து மன்னிப்பு கேட்டு அபராதம் கட்டினால் போதும். ஆனால் காங்கிரஸ் நிர்வாகிகள் மீதான வழக்கு வலுவானது. இதில் அவர்களுக்கு சிறை தண்டனை கிடைக்கும் என்று போலீஸ் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.