சர்வர் வேலை சாதாரணமானது இல்லை : இயக்குனர் கே.பாக்யராஜ் சொன்ன கதை | நயன்தாரா பிறந்தநாளுக்கு ரோல்ஸ் ராய்ஸ் கார் பரிசளித்த விக்னேஷ் சிவன் | பிளாஷ்பேக்: நட்பின் ஆழம் பேசிய “எங்கள் தங்கம்” படப் பாடல்கள் | இப்போதே புரமோஷனை ஆரம்பித்த 'வாரணாசி' படக்குழு | 'எல்ஐகே' : விக்னேஷ் சிவன் எடுத்த அதிரடி முடிவு | இழந்த வெற்றியை 'மாஸ்க்'கில் மீட்பாரா கவின் ? | தெலுங்கு ரீ என்ட்ரிக்காக காத்திருக்கும் பிந்து மாதவி | தமிழுக்கு வரும் துளு நடிகை | பிளாஷ்பேக் : மம்முட்டி கேரக்டரில் நடித்த சிவகுமார் | பிளாஷ்பேக் : வாய்ப்புக்காக பிச்சைக்காரர் தோற்றத்திற்கு மாறிய ஜெமினி கணேசன் |

ராஜமவுலி இயக்கத்தில், ஜுனியர் என்டிஆர், ராம்சரண் தேஜா மற்றும் பலர் நடிக்கும் படம் 'ஆர்ஆர்ஆர்'. சுமார் 400 கோடி ரூபாய் பட்ஜெட்டில் இப்படம் தயாராகியுள்ளதாக சொல்லப்படுகிறது. அடுத்த வருடம் ஜனவரி 7ம் தேதி இப்படம் உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியாகிறது.
ஆனால், இப்படத்திற்கு ஆந்திரா மாநிலத்தில் புதிய சிக்கல் ஒன்று உருவாகி உள்ளது. ஆந்திர மாநில அரசு சில மாதங்களுக்கு முன்பு சிறிய நகரங்கள், கிராமங்களில் சினிமா டிக்கெட் கட்டணம் 20 ரூபாய், 30 ரூபாய் என நிர்ணயித்தது. அதனால் பெரிய பட்ஜெட்டில் தயாராகும் படங்கள் தியேட்டர்களில் வசூலைப் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டது. இது தொடர்பாக ஏற்கெனவே திரையுலகத்தினர் பேசி வருகிறார்கள். சிலர் ஆந்திர முதல்வரைச் சந்தித்தும் கோரிக்கை வைத்தனர். ஆனால், அரசு இன்னும் அதில் எந்த ஒரு மாற்றத்தையும் செய்யவில்லை.
இந்நிலையில் தெலுங்கில் 'ஆர்ஆர்ஆர், ராதே ஷ்யாம், புஷ்பா' உள்ளிட்ட சில பெரிய பட்ஜெட் படங்கள் அடுத்தடுத்து வெளியாக உள்ளன. இவற்றில் 'ஆர்ஆர்ஆர்' படத்தின் பட்ஜெட் தான் மிக அதிகம். எனவே, அவர்களுக்கு குறைந்த கட்டணத்தில் வசூலை அள்ளினாலும் நஷ்டம் ஏற்பட வாய்ப்புண்டு.
இந்நிலையில் இது தொடர்பாக ஆந்திர அரசின் உத்தரவை எதிர்த்து ஆர்ஆர்ஆர் தயாரிப்பு நிறுவனம் வழக்கு தொடரப் போவதாக தகவல் வெளியானது. அதை தயாரிப்பு நிறுவனம் மறுத்துள்ளது. இது தொடர்பாக விரைவில் அரசிடம் பேசப்போவதாகவும், எந்த சிக்கலும் இல்லாமல் பிரச்னையைத் தீர்க்க முயற்சிக்கப் போவதாகவும் தெரிவித்துள்ளது.
ராஜமவுலி இயக்கி இதற்கு முன்பு வெளிவந்த 'பாகுபலி' படத்தின் இரண்டு பாகங்களுக்கும் 500 ரூபாய் வரையில் டிக்கெட் கட்டணம் இருந்ததால்தான் அந்தப் படம் பெரிய வசூலை அள்ளியது. ஆந்திர அரசின் டிக்கெட் கட்டண முடிவுக்கு ரசிகர்கள் பெரும் ஆதரவு கொடுத்துள்ள நிலையில் 'ஆர்ஆர்ஆர்' கட்டணம் எப்படி நிர்ணயிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.