படம் 1% ஏமாற்றினாலும் என் வீடுதேடி வரலாம்: 'தி ராஜா சாப்' இயக்குனர் மாருதி பேச்சு | பிரியங்கா மோகனின் கன்னட படம் '666 ஆப்ரேஷன் ட்ரீம் தியேட்டர்' பர்ஸ்ட்லுக் வெளியீடு | பிரபாஸின் 'தி ராஜா சாப்' படத்தின் டிரைலர் இன்று வெளியாகவில்லை! வதந்தியை தெளிவுபடுத்திய படக்குழு! | விக்ரம் பிரபுவின் 'சிறை' படத்தை பாராட்டிய மாரி செல்வராஜ்! | 'டாக்சிக்'-ல் எலிசபெத் ஆக ஹூமா குரேஷி | ரஜினியை வைத்து முதல் மரியாதை போன்ற படம் இயக்க ஆசை! - சுதா கொங்கரா | 'பராசக்தி' படத்தின் இசை வெளியீட்டு விழா, எங்கே, எப்போது? | ரிலீசில் ரிகார்டு!: வசூலில் பெரும்பாடு: தமிழ் சினிமாவில் ரூ.2000 கோடியை ‛‛காலி'' செய்த 2025 | 'டாக்சிக்' படத்தின் அனுபவம் குறித்து ருக்மணி வசந்த்! | விஜய் முடிவை மாத்தணும்.. மீண்டும் நடிக்கணும்: நடிகர் நாசர் கோரிக்கை |

படம் : காதல்
வெளியான ஆண்டு : 2004
நடிகர்கள் : பரத், சந்தியா, சுகுமார், தண்டபாணி
இயக்கம் : பாலாஜி சக்திவேல்
தயாரிப்பு : எஸ் பிக்சர்ஸ்
பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் எளிமையான, தரமான படங்களை தயாரிக்க விரும்பி, எஸ் பிக்சர்ஸ் நிறுவனத்தை துவக்கினார். அதன் முதல் படமாக வெளிவந்தது, காதல். ஒரு ரயில் பயணத்தில் சந்தித்த நபரின் உண்மைக் கதையை மையமாக வைத்துத் தான், இப்படத்தை பாலாஜி சக்திவேல் உருவாக்கினார்.
ஏழை மெக்கானிக்காக நாயகன், ஜாதி மற்றும் பணபலமிக்க நபரின் மகளாக நாயகி. இருவருக்கும் இடையே காதல் முளைத்து, மதுரையிலிருந்து சென்னை சென்று, திருமணம் செய்துக் கொள்கின்றனர். நாயகியின் உறவினர்கள் சமாதானம் பேசி, காதல் ஜோடியை, மதுரைக்கு அழைத்து செல்கின்றனர். அங்கு என்ன நிகழ்ந்தது என்பது தான், அதிர்ச்சியூட்டும் க்ளைமேக்ஸ்.
படத்தின் ஒரு பகுதி மதுரை மண்ணும்; மறுபகுதி சென்னை மேன்ஷன் வாழ்க்கையும் என, பிரிக்கப்பட்டிருந்தது. தனுஷ், சாந்தனு ஆகியோர், இக்கதையில் நடிக்க மறுத்தனர்; அதன்பின், பரத் நடித்தார். முருகன் கதாபாத்திரத்தில் மிக சிறப்பாக நடித்து, ரசிகர்களை உருக செய்தார்.
இப்படத்தில், சந்தியாவின் தோழியாக நடித்தவர் தான், முதலில் நாயகியாக நடித்தார். சிறுமியாக இருந்ததால் மாற்றப்பட்டார். இசையமைப்பாளராக அறிமுகமான ஜோஷுவா ஸ்ரீதர், கவனிக்க வைத்தார். பாடல்கள், ஹிட் அடித்தன. குறைந்த செலவில் எடுக்கப்பட்ட இப்படம், விமர்சன ரீதியாக பாராட்டப்பட்டதுடன், அதிக வசூலையும் அள்ளி குவித்தது.
தெலுங்கில், பிரேமிஸ்தே என்ற தலைப்பில், 'டப்பிங்' செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. கன்னடத்தில், செல்லுவினா சித்தாரா; பெங்காலியில், சிரோடினி டுமி ஜே அமர்; மராத்தியில், வேத் லவ் ஜீவா; நேபாளியில், மஞ்சரி; பஞ்சாபியில், ரம்ட ஜோகி என்ற தலைப்புகளில், இப்படம், 'ரீமேக்' செய்யப்பட்டது.
தமிழ் சினிமாவின் பயணத்தில் அதிர்வுகளை ஏற்படுத்தியது, காதல்!