மறக்க முடியுமா? - சண்டக்கோழி | வருமானவரி சோதனை குறித்து டாப்சி கிண்டல் | 'காப்பி' சர்ச்சையில் சாய் பல்லவி நடித்த 'சாரங்க தரியா' பாடல் | ஷங்கர் - ராம்சரண் படத்தில் தென்கொரிய நடிகை? | ஸ்ருதிஹாசனை வியக்க வைத்த பிரபாஸ் | காட்டுப்புலியுடன் மாளவிகா மோகனன் | கிரிக்கெட் வீரர் பும்ராவுடன் அனுபமா பரமேஸ்வரனுக்கு திருமணமா? | சொந்த 'கேரவன்' வாங்கிய மகேஷ் பாபு | தியேட்டர்காரர்களின் நெஞ்சைக் குளிர வைத்த 'நெஞ்சம் மறப்பதில்லை' | தெலுங்கில் ரீமேக் ஆகும் களத்தில் சந்திப்போம் |
படம் : விருமாண்டி
வெளியான ஆண்டு : 2004
நடிகர்கள் : கமல், அபிராமி, பசுபதி, நெப்போலியன்
இயக்கம் : கமல்
தயாரிப்பு : கமல்
நடந்து முடிந்த ஒரு சம்பவத்தை, வெவ்வேறு கோணத்தில் சொல்லும், உலகப் புகழ் ஜப்பானிய இயக்குனர் அகிரா குரோசோவாவின், ரோஷமான் படத்தின் பாணியில் உருவானது, விருமாண்டி. இப்படத்திற்கு முதலில் சூட்டப்பட்ட பெயர் சண்டியர். இதற்கு அரசியல் ரீதியில் எதிர்ப்பு கிளம்பியது. இதனால் தேனி மாவட்டத்தில் நடந்த, இப்படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. அன்றைய முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து, படம் குறித்து விளக்கம் அளித்தார் கமல். இதைத் தொடர்ந்து, படத்தின் தலைப்பு, விருமாண்டி என மாற்றப்பட்டது.
கிராமத்தில், 26 பேர் படுகொலை செய்யப்பட, குற்றவாளிகளான விருமாண்டிக்கு, துாக்கு தண்டனையும்; கொத்தால தேவருக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்படுகிறது. மரண தண்டனை குற்றவாளிகள் குறித்து ஆவண படம் எடுக்கும் ரோகினி, குற்றவாளிகளான இருவரிடமும் பேட்டி காண்கிறார். நடந்த ஒரு சம்பவம் விருமாண்டியின் பார்வையிலும்; கொத்தால தேவர் பார்வையிலும் சொல்லப்படுகிறது. இப்படம், மரண தண்டனை தேவையில்லை என்பதை வலியுறுத்தியது.
படத்தின் கதை, திரைக்கதை, இயக்கம் என அனைத்திலும், கமல் ஆச்சரியப்படுத்தினார். தென் கொரியாவில் நடந்த உலக திரைப்பட விழாவில், சிறந்த ஆசிய திரைப்படம் என்ற விருதை, இப்படம் பெற்றது. அதிக வன்முறை காட்சிகள் இடம் பெற்றதால், இந்த படத்திற்கு, 'ஏ' சான்றிதழ் வழங்கப்பட்டது.
இளையராஜா, இப்படத்தில் அதகளம் செய்திருந்தார். 'மாட விளக்கை யாரு, சண்டியரே சண்டியரே, கொம்புல பூவச் சுத்தி, ஒன்னை விட...' என, பாடல்களில் துாள் கிளப்பியவர், பின்னணியில் பிரமாண்டம் காட்டினார். ஜல்லிக்கட்டு காட்சியில், ஒளிப்பதிவாளர் கேசவ் பிரகாஷின் கேமரா புகுந்து விளையாடியது. கலை இயக்குனர் பிரபாகர் விருமாண்டி கோவில், குளம், நீதிமன்ற வளாகம், சிறை என, அசத்தியிருந்தார்.
விருமாண்டி மிரள செய்தான்!