300 மில்லியன் பார்வைகளைக் கடந்த 'வாயாடி பெத்த புள்ள' | யு டியூப் தளத்தில் 'டாப் வியூஸ்' பெற்ற தமிழ் பாடல்கள் : ஒரு ரீவைண்ட்…! | 23 நாளில் படப்பிடிப்பு... ரூ.25 லட்சத்தில் படம் : வியக்க வைக்கும் ‛மாயக்கூத்து' | ராஜா சாப் படத்தில் விக் வைத்து நடிக்கிறாரா பிரபாஸ்? : ரசிகர்களுக்கு எழுந்த புதிய சந்தேகம் | ராமாயணா முதல் பாகத்தில் யஷ் வருவது வெறும் 15 நிமிடங்கள் தான் | மலையாளத்தில் டைம் ட்ராவல் பின்னணியில் உருவாகும் 'ஆடு 3' | சுதீப்பின் 47வது படம் அறிவிப்பு : ஜூலையில் துவங்கி டிசம்பரில் ரிலீஸ் | குழந்தையை தத்தெடுத்து வளர்க்க திட்டமிடும் ஸ்ருதிஹாசன் | அட்லி இயக்கும் விளம்பரத்தில் நடிக்கும் ரன்வீர் சிங், ஸ்ரீ லீலா | ராம் பொத்தினேனி எழுதிய பாடலை பின்னணி பாடிய அனிருத் |
படம் : காக்க... காக்க
வெளியான ஆண்டு : 2003
நடிகர்கள் : சூர்யா, ஜோதிகா, ஜீவன்
இயக்கம் : கவுதம் மேனன்
தயாரிப்பு : கலைப்புலி எஸ்.தாணு
மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்... இந்த பாடலுக்கு காரணம் இருக்கிறது. நடிகர் சூர்யா, சினியுலகில் தனக்கென ஓரிடம் கிடைக்காமல் தடுமாறிய காலத்தில், அவருக்கு கைகொடுத்தது, அன்றைய காதலியும், தற்போதைய மனைவியுமான ஜோதிகா தான்!
காக்க... காக்க படத்திற்கு, இயக்குனர் கவுதம், ஆரம்பத்தில் மாதவன், அஜித், விக்ரம் ஆகியோரை அணுகினார். ஆனால், ஜோதிகா சிபாரிசு செய்ததால், சூர்யாவை தேர்ந்தெடுத்தார். படம் சூப்பர் ஹிட் ஆனது. சூர்யாவின் சினிமா வாழ்க்கையில் பெரும் வெளிச்சம் பாய்ந்தது.
என்கவுன்டர் போலீசுக்கும், அண்ணனை பறிகொடுத்த பிரபல ரவுடிக்கும் இடையே நடக்கும் ஆக் ஷன் மோதல் தான் படத்தின் கதை. நேர்மையான, ஐ.பி.எஸ்., அதிகாரி அன்பு செல்வனாக சூர்யா. கையில் காப்பும், முறுக்கு மீசையும், திமிர் உடலுமாக பிரமாதப்படுத்தி இருந்தார். பள்ளி ஆசிரியை மாயாவாக ஜோதிகா. கண்ணால் காதல் பேசினார். ஒரிஜினல் காதல் ஜோடி என்பதால், கெமிஸ்ட்ரி பிரமாதமாக இருந்தது.
ஜீவன், இப்படத்தில் கொடூர வில்லனாக நடித்து, பலரது பாராட்டுகளை அள்ளிச் சென்றார். ஆர்.டி.ராஜசேகரின் ஒளிப்பதிவில், அவ்வளவு புத்துணர்ச்சி இருந்தது. படத்தின் விறுவிறுப்புக்கு, அவரின் ஒளிப்பதிவும், ஆண்டனியின் எடிட்டிங், ஹாரிஸ் ஜெயராஜின் இசை ஆகியவை முக்கிய பங்காற்றின.
நாங்க நாலு பேர்... எங்களுக்கு பயம்னா என்னன்னு தெரியாது போன்ற வசனங்கள் ரசிக்க செய்தன. உயிரின் உயிரே, துாது வருமா, என்னை கொஞ்சம் மாற்றி, ஒன்றா இரண்டா ஆசைகள், ஒரு ஊரில் அழகே... பாடல்கள், மிகப் பெரிய வெற்றியை பெற்றன. படத்தின் வெற்றி காரணமாக ஹிந்தி, தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில், ரீமேக் செய்யப்பட்டது.
காக்க... காக்க என்றனர், அருள் கிடைத்தது!