ஏ.ஆர்.ரஹ்மான் வழக்கறிஞர் எச்சரிக்கை | ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாகும் ‛ஸ்டார்' பட நடிகை | நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படப்பிடிப்பு நிறைவு பெற்றது | துப்பாக்கிய பிடிங்க : விஜய்யின் பெருந்தன்மை - சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி | விஷ்ணு விஷால் படத்தில் நிகழ்ந்த மாற்றம் | புஷ்பா 2 டிரைலர் - தெலுங்கை விட ஹிந்திக்கு அதிக வரவேற்பு | அட்லியின் அடுத்த படம் : வெளியானது புதிய அப்டேட் | அஜித்தின் குட் பேட் அக்லி படப்பிடிப்பு விரைவில் முடிவடைகிறது | சூர்யாவின் கர்ணா ஹிந்தி படம் டிராப்பா? | டில்லியில் சிறிய அளவில் பிறந்தநாள் கொண்டாடிய நயன்தாரா |
படம் : என் புருசன் குழந்தை மாதிரி
வெளியான ஆண்டு : 2001
நடிகர்கள் : லிவிங்ஸ்டன், தேவயானி, விந்தியா, வடிவேலு
இயக்கம் : எஸ்.பி.ராஜ்குமார்
'அடுத்த முறை இதை விட அதிகமா கூவணும்...' என, வடிவேலு காமெடியில் அதகளம் செய்த படம், என் புருசன் குழந்தை மாதிரி. 'செத்து செத்து விளையாடுவோமோ, மாமனுக்கு மரியாதை இல்லையா...' போன்ற காமெடி எல்லாம், வேறு லெவல்! இப்படத்தின் காமெடி காட்சிகள் இன்றும், 'மீம்ஸ்' வழியே, பட்டையை கிளப்பி வருகின்றன.
ஊர் செல்வந்தராக இருக்கும் முருகேசனுக்கு, தன் மாமன் மகளான மகேஸ்வரி மீது காதல். இதற்காக, சில கிறுக்குத்தனமான காரியங்களில் ஈடுபடுகிறார். இந்நிலையில் முருகேசனுக்கும், மகேஸ்வரிக்கும் திருமணம் நடக்கிறது. இதற்கிடையில், நடனக் கலைஞரான சிந்தாமணியின் கர்ப்பத்திற்கு, முருகேசன் காரணமாகிறார். மகேஸ்வரியும் கர்ப்பமாக இருக்கிறார். இந்த பிரச்னையை, முருகேசன் எப்படி சமாளிக்கிறார் என்பதே, படத்தின் திரைக்கதை.
ஆர்வக்கோளாறு, அப்பாவி என, பொறியில் சிக்கிய எலி போன்ற முருகேசன் கதாபாத்திரத்தில், லிவிங்ஸ்டன் மிக பொருத்தமாக நடித்திருந்தார். மகேஸ்வரியாக தேவயானியும்; சிந்தாமணியாக விந்தியாவும் தங்கள் கதாபாத்திரத்தை மிக சிறப்பாக செய்திருந்தனர். வடிவேலுவை, படத்தின் துாண் எனக் கூறலாம். அவர் இடம் பெறும் காட்சிகளில் எல்லாம், தியேட்டர் வெடித்து சிரித்தது.
தேவாவின் இசையில், 'ஆடிய ஆட்டம், சித்திரையே, நாலு அடி ஆறு அங்குலம், பட்டாம்பூச்சி, வாழ வைக்கும், வெண்ணிலா...' பாடல்கள் தாளம் போடச் செய்தன. இப்படம், வசூல் ரீதியாக வெற்றி பெற்றதை தொடர்ந்து, மா அயநா சண்டி பில்லாடு எனும் பெயரில், தெலுங்கில், 'ரீமேக்' செய்யப்பட்டது.
நீதி, நேர்மை எதுவும் இல்லை என்றாலும், என் புருசன் குழந்தை மாதிரி வரவேற்கப்பட்டது.