Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » மறக்க முடியுமா »

மறக்க முடியுமா? - பார்த்தாலே பரவசம்

19 ஜன, 2021 - 18:29 IST
எழுத்தின் அளவு:
Marakkamudiyuma---paarthale-paravasam

படம் : பார்த்தாலே பரவசம்
வெளியான ஆண்டு : 2001
நடிகர்கள் : மாதவன், சிம்ரன், சினேகா, ராகவா லாரன்ஸ்
இயக்கம் : கே.பாலசந்தர்
தயாரிப்பு : கவிதாலயா

இயக்குனர் சிகரம் கே.பாலசந்தரின், 100வது படம், பார்த்தாலே பரவசம். மாதவன், சிம்ரன், சினேகா, ராகவா லாரன்ஸ், வாலி, விவேக், மணிவண்ணன், வடிவுக்கரசி, ராதிகா சவுத்ரி, சமுத்திரக்கனி என, நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்தனர். கமல், ரம்யா கிருஷ்ணன் ஆகியோர் கவுரவ வேடத்தில் நடித்தனர். மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இப்படம், கலவையான விமர்சனங்களையும், வசூலில் தோல்வியையும் பெற்றது.

மருத்துவரான மாதவன், சிம்ரனை திருமணம் செய்து கொள்கிறார். மாதவனின் கடந்த கால வரலாறு, இருவரையும் பிரித்து, விவாகரத்து வரை அழைத்துச் செல்கிறது. இதை தொடர்ந்து மாதவனை, அவரது மருத்துவமனையில் பணிபுரியும் சினேகா விரும்புகிறார். சிம்ரனை, நடனக் கலைஞரான ராகவா லாரன்ஸ் விரும்புகிறார். இரு ஜோடிகளின் திருமணமும், ஒரே தேதியில் நடக்கவிருக்கிறது. சில உண்மைகள் தெரிய வர யார் யாருடன் இணைந்தனர் என்பது தான், படத்தின் கிளைமேக்ஸ்.

பெண்கள் விரும்பும் டாக்டராக மாதவன், அந்த கதாபாத்திரத்திற்கு ஏக பொருத்தமாக இருந்தார். சிம்ரனின் நடிப்பு, மெருகேறி இருந்தது. இதை தவிர, படத்தில் இடம்பெற்ற அத்தனை கதாபாத்திரங்களுக்கும், ஏதாவது ஒரு, 'டச்' கொடுத்து படத்தை இயக்கியிருந்தார், பாலசந்தர்.

ஏ.வெங்கடேஷ் ஒளிப்பதிவில், அவ்வளவு புத்துணர்ச்சி இருந்தது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையில், 'லவ் செக், நாதிர் தின்னா, அழகே சுகமா, அன்பே நீ என் தேசிய, ராத்தியின் சொந்தக்காரா...' பாடல்கள் ரசிக்க வைத்தன. தமிழ் சினிமாவில், 100வது படம் பலருக்கு வெற்றி தரவில்லை. அந்த பட்டியலில், கே.பாலசந்தரும் இணைந்தார்.

பார்த்தாலே பரவசம் தரவில்லை!

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - சிட்டிசன்மறக்க முடியுமா? - சிட்டிசன் மறக்க முடியுமா? - என் புருசன் குழந்தை மாதிரி மறக்க முடியுமா? - என் புருசன் குழந்தை ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in