விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா மந்தனா 'மெஹந்தி' நிறைவு | நானி இரட்டை வேடத்தில் நடிக்கும் படத்திற்கு 'பிளடி ரோமியோ' என டைட்டில் | வாரணாசி : ஜார்ஜியாவில் அடுத்த கட்டப் படப்பிடிப்பு | ராஜமவுலி, மகேஷ்பாபு சண்டை ; ராம் கோபால் வர்மா பகிர்ந்த வைரல் வீடியோ | கேரளா ஸ்டோரி 2 வெளியீடு குறித்து வழக்கு, அடுத்தக்கட்ட நகர்வு என்ன | நிலச்சரிவில் கால் இழந்த பெண்ணுக்கு செயற்கைக்கால் மற்றும் சொந்த வீடு ; மம்முட்டி உதவி | 'கராத்தே பாபு'வில் ரவி மோகனுடன் மோதும் சக்தி வாசுதேவன் | அடுத்தடுத்து திரைக்கு வரும் திரிஷா படங்கள் | மார்ச் 12ல் வெளியாகும் மேட் இன் கொரியா | தெலுங்கில் பிஸியாகும் ருக்மணி வசந்த் |

படம் : சிட்டிசன்
வெளியான ஆண்டு : 2001
நடிகர்கள் : அஜித், வசுந்தரா தாஸ், மீனா, நக்மா
இயக்கம் : சரவண சுப்பையா
தயாரிப்பு : நிக் ஆர்ட்ஸ்
இன்று, காணாமல் போன அத்திப்பட்டி கிராமம் குறித்து பார்க்கலாம்... அதாவது சிட்டிசன்! இப்படத்தில் அஜித், ஒன்பது வேடங்களில் தோன்றியது, அப்போது பரபரப்பாக பேசப்பட்டது. கலெக்டர், நீதிபதி, காவல் துறை அதிகாரி ஆகியோரை, பல்வேறு வேடங்களில் சென்று, அஜித் கடத்துகிறார். ஏன் அவர்களை கடத்தினார் என்ற கேள்விக்கு, அத்திப்பட்டி என்ற அவரது கிராமமே அழிக்கப்பட்டது தான் காரணம் என்பது தெரிய வருகிறது. கடத்திய மூவரையும், அஜித் என்ன செய்தார்? அவர், இந்திய அரசிடம் முன்வைக்கும் கோரிக்கை என்ன என்பதே, படத்தின் கிளைமேக்ஸ்.
அத்திப்பட்டி கிராமம் அழிக்கப்படும் காட்சி, எந்த ஹாலிவுட் படம் என, தாடையை தடவி, யோசிக்க செய்தது. அஜித், மிக நம்பிக்கையோடு நடித்த படம் இது. இப்படத்தில் ஹீரோவிற்கு அடுத்த இடத்தை பிடித்தவர், சி.பி.ஐ., அதிகாரி சரோஜினி ஹரிச்சந்திரனாக வரும், நக்மா தான்.
டப்பிங் ஆர்ட்டிஸ்ட் அனுராதாவின் குரல், அவ்வளவு கம்பீரமாக, நக்மாவிற்கு பொருந்தியிருந்தது. மீனா நடித்த கதாபாத்திரத்தில் நடிக்கவிருந்தவர், சேது படத்தில் நடித்த அபிதா. அதேபோல, வசுந்தரா தாஸ் நடித்த பாத்திரத்தில் முதலில், சமீரா ரெட்டியே தேர்வு செய்யப்பட்டார். ஜெமினி கணேசனும் இப்படத்தில் ஆரம்பத்தில் நடிப்பதாக இருந்தது; ஆனால், அதில் பாண்டியன் நடித்தார்.
பாலகுமாரனின் வசனமும், ரவி கே.சந்திரனின் ஒளிப்பதிவும் படத்திற்கு பலம் சேர்த்தன. அத்திப்பட்டி எனும் தீவை, சென்னையின் புறநகரில் அமைத்து, படப்பிடிப்பு நடத்தப்பட்டது. தேவாவின் இசையில், 'மேற்கே உதிக்கும் சூரியனே, பூக்காரா பூக்காரா, சிக்கிமுக்கி கல்லு, ஐ லைக் யூ...' பாடல்கள், பெரும் வெற்றி பெற்றன.
சிட்டிசன் சொல்வதை சட்டமாக்கலாம்!