'ஜனநாயகன்' படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு | சத்ய சாய் பாபாவின் மகிமையை சொல்லும் ‛அனந்தா' : நவ., 23ல் வெளியீடு | கிஸ் முதல் நெட்வொர்க் வரை... இந்த வாரா ஓடிடி ரிலீஸ்...! | ''பீரியட் படம் பண்ணுவது தனி அனுபவம்... டைம் மிஷின் மூலம் அந்த காலம் செல்வது மாதிரி'': துல்கர் சல்மான் | ரோஜா 'கம்பேக்': 'லெனின் பாண்டியன்' படத்தில் நடிக்கிறார் | மணிரத்னம் படம் : சிம்புவிற்கு பதில் விஜய் சேதுபதி | ரஜினிகாந்த்தை 'தலைவர்' எனக் குறிப்பிட்ட கமல்ஹாசன் | ஹரிஷ் கல்யாண் அடுத்து நடிக்கும் இரண்டு படங்கள் | நவம்பர் 21ல் திரைக்கு வரும் ‛தீயவர் குலை நடுங்க' | படப்பிடிப்புக்காக ஹனிமூனை மாற்றிய ஹீரோ |

படம் : மின்னலே
வெளியான ஆண்டு : 2001
நடிகர்கள் : மாதவன், அப்பாஸ், ரீமா சென், விவேக்
இயக்கம் : கவுதம்
தயாரிப்பு : டாக்டர் முரளி மனோகர்
இப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார், கவுதம். அடுத்த படத்தில், கவுதம் வாசுதேவ் ஆனார்; அதற்கு அடுத்து தான் கவுதம் வாசுதேவ் மேனன் என்றானார். ஓ லாலா என்ற காதல் திரைப்படத்தை ஆரம்பித்தார், கவுதம். பின், இப்படத்தின் தயாரிப்பாளர்கள் மாறினர். அதைத்தொடர்ந்து, மின்னலே என தலைப்பு மாறியது.
மாதவன், தன் காதலியைப் பின்தொடர, தன் முன்னாள் கல்லுாரி எதிரியான அப்பாசின் அடையாளத்தை பயன்படுத்திக் கொள்கிறார். இறுதியாக உண்மை வெளிவரும்போது, மாதவன் சந்திக்கும் பிரச்னையும், அதன் முடிவும் தான், படத்தின் திரைக்கதை.
ஏ.ஆர்.ரஹ்மானிடம் உதவியாளராக பணியாற்றிய ஹாரிஸ் ஜெயராஜ், இப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகம் ஆனார். இத்திரைப்படம் வெளிவருவதற்கு முன் இதன் பாடல்கள் பிரபலமாயின. 'அழகிய தீயே, ஒரே ஞாபகம், நெஞ்சைப் பூப்போல், ஓ மாமா மாமா, பூப்போல் பூப்போல், வேறென்ன வேறென்ன, வெண்மதி வெண்மதியே...' பாடல்கள் தமிழகம் எங்கும் ஒலித்தன.
'நடபைரவி' ராகத்தில், பாடலாசிரியர் தாமரை எழுதிய, 'வசீகரா என் நெஞ்சினிக்க...' பாடல், மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. அதன் பின், முன்னணி பாடலாசிரியரானார், அவர். இத்திரைப்படத்திற்கு ஆர்.டி.ராஜசேகர் மற்றும் ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்தனர்.
அலைபாயுதே படத்திற்கு பின், தமிழகம் எங்கும் கவனிக்கப்படும் நடிகராக, மாதவன் மாறியிருந்தார். இப்படம், அவருக்கு நட்சத்திர அந்தஸ்தைக் கொடுத்தது. மாதவனின் அழுத்தத்தால், தான் இடம் பெற்ற காட்சிகள், படத்தில் குறைக்கப்பட்டதாக, அப்பாஸ் குற்றஞ்சாட்டினார். படம், வணிகரீதியாக பிரமாண்ட வெற்றியைப் பெற்றது. அதே ஆண்டு, கவுதம் இப்படத்தை ரெஹ்னா ஹே தேரே தில் மேயின் என்ற பெயரில், 'ரீமேக்' செய்தார். அதிலும், மாதவனே நடித்திருந்தார்.
ரசிக்க வைத்தது, மின்னலே!