அட்லியின் அடுத்த படம் : வெளியானது புதிய அப்டேட் | அஜித்தின் குட் பேட் அக்லி படப்பிடிப்பு விரைவில் முடிவடைகிறது | சூர்யாவின் கர்ணா ஹிந்தி படம் டிராப்பா? | டில்லியில் சிறிய அளவில் பிறந்தநாள் கொண்டாடிய நயன்தாரா | 2024ல் அதிகம் பேர் பார்த்த படமாக 'அமரன்' | வாரணாசி கோவிலுக்கு சென்று வழிபட்ட ஸ்ரீலீலா | சங்கராந்தியில் ஒரு 'ஷங்கரா'ந்தி : கேம் சேஞ்சர் டப்பிங்கில் வியந்த எஸ்.ஜே.சூர்யா | 6 வருடங்களில் 6வது முறையாக பஹத் பாசிலுடன் இணைந்த இயக்குனர் | நான் தற்கொலை செய்தால் அரசு தான் பொறுப்பு : நடிகர் முகேஷ் மீது பாலியல் புகார் அளித்த நடிகை விரக்தி | தம்பிக்கு கை கொடுத்தவர்கள் அண்ணனை கவிழ்த்தது ஏன் ? வைராலகும் மீம்ஸ் |
படம் : பிரியாத வரம் வேண்டும்
வெளியான ஆண்டு : 2001
நடிகர்கள் : பிரசாந்த், ஷாலினி, கோவை சரளா, மணிவண்ணன்
இயக்கம் : கமல்
தயாரிப்பு : நிகிலா எண்டர்பிரைசஸ்
நட்பு, காதலாக மலரும் தருணத்தை, அழகாக வெளிக்காட்டிய படம், பிரியாத வரம் வேண்டும். கடந்த, 1999ல், மலையாளத்தில் வெற்றி பெற்ற, நிறம் என்ற படத்தின், ரீமேக் இது. நிறம் படத்தை இயக்கிய கமலே, தமிழிலும் இயக்கினார். இரு படத்திலும் கதாநாயகியாக, ஷாலினி நடித்தார்.
இப்படம் சந்தித்த பிரச்னைகள் ஏராளம். படம் வெளியாவதற்குள், படக்குழுவிற்கு, நாக்கு தள்ளிவிட்டது எனக் கூறலாம். இரண்டாவது நாயகியாக நடிக்க, சினேகா தேர்வு செய்யப்பட்டார். பின், நிறம் படத்தில் நடித்த ஜோமோல், அக்கதாபாத்திரத்தில் நடித்தார். தயாரிப்பாளரின் பணப்பிரச்னை காரணமாக, இப்படம் துவங்குவதில் காலதாமதம் ஏற்பட்டது. இதனால், பிரசாந்த் வேறு படங்களில் நடிக்க சென்றார்.
ஷாலினியின், கால்ஷீட் வீணடிக்கப்பட்டது. ஒருவழியாக படப்பிடிப்பு திக்கி திணறி நடக்கையில், அஜித் - ஷாலினி திருமணம் நடந்தது. திருமணத்திற்குப் பின் நடிப்பதில்லை என, முடிவெடுத்திருந்தார். அதனால், கிளைமேக்ஸ் எடுக்க முடியவில்லை. இதையடுத்து நிறம் படத்திலிருந்த காட்சிகளை எடுத்து வெட்டி, ஒட்டி படத்தை முடித்தனர்.
தேதி பிரச்னை காரணமாக, ராகவா லாரன்ஸ் நடனத்தில், வாஸ்கோடகாமா... என்ற பாடல், படம் பிடிக்கப்பட்டது. இதனால் பிரசாந்த் கோபமடைந்தார். பின், தன் சொந்த செலவில், அந்த பாடலின் படப்பிடிப்பை மேற்கொண்டார். இப்படி பல பிரச்னைகளை சந்தித்தாலும், குறிப்பிடத்தக்க வெற்றியை இப்படம் பெற்றது.
எஸ்.ஏ.ராஜ்குமார் இசையில், பிரிவொன்றை சந்தித்தேன், அழகு பொண்ணு, டிக்கி டிக்கி லோனா, விடை கொடு விடை கொடு உயிரே... பாடல்கள் ரசிக்க செய்தன.
குடும்பத்தோடு ரசிக்கத்தக்க, நல்ல காதல் கதை, பிரியாத வரம் வேண்டும்.