நடிகையின் ஆசையை நிறைவேற்றிய முதல்வர் ஸ்டாலின் | அனுஷ்காவின் ‛காட்டி' டிரைலர் வெளியீடு : ரிலீஸ் தேதியும் அறிவிப்பு | ரவி மோகனை தொடர்ந்து சிவகார்த்திகேயனுக்கு வில்லனாகும் ஆர்யா | பராசக்தி படத்தில் நடிக்காதது ஏன் : லோகேஷ் கனகராஜ் விளக்கம் | ராம் சரண் படம் கைவிடப்பட்டது ஏன் : கவுதம் தின்னனூரி விளக்கம் | சிவகார்த்திகேயனின் மன அழுத்தத்தை போக்கும் பிள்ளைகள் | ‛கிங்டம்' படத்திற்கு எதிர்ப்பு : வருத்தம் தெரிவித்த படக்குழு | 23 ஆண்டுகளுக்கு பின் நாளை மறுநாள் ரீ-ரிலீஸ் ஆகிறது சுந்தரா டிராவல்ஸ் | ஆகஸ்ட் 8ல் 13 படங்கள் வெளியீடா ??? | வரவேற்பைப் பெறாத 'பரியேறும் பெருமாள்' ஹிந்தி ரீமேக் |
படம் : ப்ரியமானவளே
வெளியான ஆண்டு : 2000
நடிகர்கள் : விஜய், சிம்ரன், எஸ்.பி.பாலசுப்பிரமணியம், விவேக்
இயக்கம் : கே.செல்வபாரதி
தயாரிப்பு : கீதா சித்ரா இன்டர்நேஷனல்
ஒரு ஆண்டு ஒப்பந்த திருமணம் என்ற புதிய கொள்கையை, தமிழ் சினிமாவிற்கு அறிமுகப்படுத்திய படம், ப்ரியமானவளே. கடந்த, 1996ல், பவித்ரா பந்தம் என்ற தெலுங்கு படம், சூப்பர் ஹிட் ஆனது. இதை, 1999ல், ஹம் ஆப்கே தில் மெய்ன் ரேகி ஹென் என, ஹிந்தியில் ரீமேக் செய்தனர். 2000ம் ஆண்டில், தமிழில், ப்ரியமானவளே... என, ரீமேக் செய்யப்பட்டது.
பூவே உனக்காக படத்திற்கு பின், இப்படத்தின் மூலம், பெண்களுக்கு பிடித்த நடிகராக, விஜய் மாறினார். விஜயின் தீபாவளி வெற்றி படம் என்ற ராசி, இப்படத்தில் இருந்து தான் ஆரம்பமானது. வெளிநாட்டில் படித்துவிட்டு திரும்பும் விஜய், ஒரு ஆண்டு மட்டும் திருமண வாழ்க்கையில் ஈடுபடுவோம். அதன் பின் பிடித்திருந்தால் தொடர்வோம்; இல்லையென்றால் பிரிந்துவிடுவோம் என, சிம்ரனிடம் ஒப்பந்தம் போடுவார். குடும்ப சூழலால் சிம்ரன் ஒப்புக்கொள்வார். ஒரு ஆண்டு திருமண வாழ்க்கைக்கு பின், விஜய் பிரிந்து செல்வார். அதன்பின் விஜய்க்கு ஏற்படும் மனமாற்றம், சிம்ரனின் கோபம் என, படம் விறுவிறுப்பாக அடுத்த கட்டத்திற்கு நகரும்.
விவேக்கின் நகைச்சுவை, இப்படத்தில் பெரும் உபயோகமாக இருந்தது. பணக்கார, பாசமிக்க தந்தையாக எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பிரமாதமாக நடித்திருந்தார். விஜய் - சிம்ரன் ஜோடி, இப்படத்திலும் பட்டையை கிளப்பியது. முக்கியமாக சிம்ரனுக்கு டப்பிங் குரல் கொடுத்த, ஷமிதா ரெட்டிக்கு பெரும் பாராட்டுகள் குவிந்தன.
விஜய்க்கு முதல் குழந்தை பிறந்த நேரத்தில், ஜூன் ஜூலை மாதத்தில்... என்ற பாடலின் படப்பிடிப்பு நடந்துள்ளது. விஜய், செம குஷியாக நடனமாடிய பாடலாக அது மாறியது. எஸ்.ஏ.ராஜ்குமார் இசை அமைத்திருந்தார்.
அன்புடையோர் எல்லாம் ப்ரியமானவளே!