ஏ.ஆர்.ரஹ்மான் வழக்கறிஞர் எச்சரிக்கை | ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாகும் ‛ஸ்டார்' பட நடிகை | நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படப்பிடிப்பு நிறைவு பெற்றது | துப்பாக்கிய பிடிங்க : விஜய்யின் பெருந்தன்மை - சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி | விஷ்ணு விஷால் படத்தில் நிகழ்ந்த மாற்றம் | புஷ்பா 2 டிரைலர் - தெலுங்கை விட ஹிந்திக்கு அதிக வரவேற்பு | அட்லியின் அடுத்த படம் : வெளியானது புதிய அப்டேட் | அஜித்தின் குட் பேட் அக்லி படப்பிடிப்பு விரைவில் முடிவடைகிறது | சூர்யாவின் கர்ணா ஹிந்தி படம் டிராப்பா? | டில்லியில் சிறிய அளவில் பிறந்தநாள் கொண்டாடிய நயன்தாரா |
படம் : சிநேகிதியே...
வெளியான ஆண்டு : 2000
நடிகையர் : ஜோதிகா, ஷப்ராணி முகர்ஜி, தபு, மனோரமா, சுகுமாரி
இயக்கம் : பிரியதர்ஷன்
தயாரிப்பு : சூர்யா சினி ஆர்ட்ஸ்
தமிழ் சினிமாவின் ஆரம்ப காலகட்டத்தில், ஆண்கள் மட்டுமே நடித்தனர். பெண் வேடத்தையும், ஆண்களே ஏற்றிருந்தனர். ஆனால், 2000வது ஆண்டில், பெண்கள் மட்டுமே நடித்த படம் ஒன்று வெளியானது. அந்த படம் தான், சிநேகிதியே...
த்ரில்லர் திரைப்படமான இதில் ஜோதிகா, பாலிவுட் நடிகை ராணி முகர்ஜியின் தங்கை ஷப்ராணி முகர்ஜி, தபு, லட்சுமி, மனோரமா, வடிவுக்கரசி என, ஏராளமான நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.
ஜோதிகாவும், ஷப்ராணியும் தோழியர். இதில் ஷப்ராணியை, பெண் பார்க்க, ஓட்டலுக்குவந்த பையன், மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டிருப்பார். அந்த கொலை பழி, ஜோதிகா மேல் விழும். அதை விசாரிக்கும், காயத்ரி ஏ.சி.பி., என்ற காவல் துறை அதிகாரியான தபு, குற்றவாளிகளை துரத்துவார். ஜோதிகாவும், ஷப்ராணியும் தப்பித்து ஓட... உண்மையான குற்றவாளி யார் என்பது தான், படத்தின் கிளைமேக்ஸ்.
படத்தின் திரைக்கதைக்குள் நட்பு, பகை, ஏமாற்றம், பதற்றம், நம்பிக்கை என, அனைத்தையும் பொருத்தியிருப்பார், பிரியதர்ஷன்.ப டத்தின் நாயகி, ஜோதிகா தான். மனுஷி, பின்னியிருப்பார். ஷப்ராணி, தன் சின்ன கண்களால், பயத்தை வெளிப்படுத்தியிருப்பார். தபுவிற்கு, சவாலான கதாபாத்திரம். இயன்றவரையில், சிறப்பாக செய்திருப்பார். மனோரமா வரும் ஓரிரு காட்சிகளிலும், தியேட்டரில் பலத்த கைத்தட்டல் எழுந்தது.
வித்யாசாகரின் இசை, படத்தின் மிகச்சிறந்த பலமாக விளங்கியது. பின்னணி இசையில், ரசிகர்களின் இதய துடிப்பை எகிறச் செய்தார். 'ராதை மனதில் ராதை மனதில், தேவதை வம்சம், கல்லுாரி மலரே, ஒத்தையடி பாதையில, கண்ணுக்குள்ளே...' பாடல்கள் பெரும் வரவேற்பை பெற்றன.
படம், வசூல் ரீதியான பெரும் வெற்றி பெறவில்லை என்றாலும், மறக்க முடியாத படங்களில் ஒன்றாக அமைந்தது.
தோள் கொடுப்பாள் சிநேகிதி!