ஒரே படம் ஓஹோ வாழ்க்கை... கன்னாபின்னான்னு இழுக்கப்படும் பெயர் : கவலையில் கயாடு லோஹர் | சினிமாவில் 60வது ஆண்டை தொட்ட வெண்ணிற ஆடை மூர்த்தி | ஜெயமோகன் படத்துக்கு இந்த நிலையா? | வில்லனாக மாறிய சேரன் | டான்ஸ் ஆட வெச்சிட்டாங்க : பிரபு நெகிழ்ச்சி | ஹரி ஹர வீரமல்லுவுக்காக 5 ஆண்டுகள் வேறு படங்களில் நடிக்காத நிதி அகர்வால் | பாலிவுட்டில் தடம் பதிப்பாரா ஜூனியர் என்டிஆர் | மோசடி வழக்கை சட்டப்படி சந்திப்பேன் : சாம் சி.எஸ் | பூமிகா ஆசை நிறைவேறுமா? | ஹீரோ இல்லாமல் நடந்த 'ஹரிஹர வீரமல்லு' பட விழா |
இந்தியத் திரையுலகின் கனவுக்கன்னியாக இருந்த மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர். அவர் மும்பை ஜுஹு பகுதியில் வாங்கியுள்ள வீடு பற்றித்தான் தற்போது பாலிவுட்டில் பரபரப்பு நிலவுகிறது.
ஆரயா பில்டிங் என்ற அபார்ட்மென்ட்டில் 14, 15 மற்றும் 16வது மாடிகளில் அமைந்துள்ள பிளாட்களை அவர் 39 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியுள்ளாராம். பிளாட்டில்
கடந்த மாதம் 10ம் தேதி அந்த வீட்டிற்கான பத்திரப்பதிவு நடந்து முடிந்துள்ளதாம். 78 லட்ச ரூபாய்க்கு அதற்கான கட்டணத்தைச் செலுத்தியுள்ளார்.
ஜான்வி திரையுலகில் நடிகையாக அறிமுகமான பின் அவர் நடித்த நான்கு படங்கள் மட்டுமே இதுவரையில் வெளிவந்துள்ளது. அதற்குள் இவ்வளவு கோடிகளைக் கொடுத்து 'லக்சுரி அபார்ட்மென்ட்'களை வாங்கியுள்ளது பாலிவுட்டில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
மும்பையில் ரியல் எஸ்டேட் என்பது சாதாரண மக்களுக்கு எட்டாக்கனி விஷயமாகும். அபார்ட்மென்ட்களே அங்கு பல கோடி ரூபாய் மதிப்புடையதாக இருக்கும். சினிமா பிரபலங்கள் கூட தனி வீடுகளை வாங்காமல் அபார்ட்மென்ட்டுகளை மட்டுமே வாங்குவார்கள்.