ஆக.,14ல் 'கூலி' ரிலீஸ்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு | ஜிவி பிரகாஷ், சைந்தவி விவாகரத்து வழக்கு: செப்.25ல் நேரில் ஆஜராக உத்தரவு | சத்யராஜ், காளி வெங்கட் இணைந்து நடிக்கும் 'மெட்ராஸ் மேட்னி' | மே மாதத்தோடு விஜய்யின் 'ஜனநாயகன்' படப்பிடிப்பு முடிவடைகிறது! | சோபிதா துலிபாலாவின் அடுத்த தமிழ் படம்! | ரேஸ் காரை ஓட்டும் அஜித்தின் மகன் ஆத்விக்! வைரலாகும் வீடியோ!! | எதிர்பார்த்ததை விட பாசிட்டிவான விமர்சனங்கள் - விக்ரம் வெளியிட்ட வீடியோ! | பரபரப்பில்லாமல் இன்றைய வெளியீடுகள் | ஆறு மாதங்கள் தள்ளிப் போனது 'இட்லி கடை' | கார் பார்க்கிங் பிரச்னை : பிக்பாஸ் பிரபலம் தர்ஷன் கைது |
பிரபல பாலிவுட் நடிகர் சொஹைல்கான். இவரது சகோதரர் அர்பாஸ்கான் இவரும் நடிகர்தான். கடந்த டிசம்பர் மாதம் 25ந் தேதி இருவரும் துபாயில் இருந்து மும்பை திரும்பி உள்ளனர். அவர்களுடன் அர்பாஸ்கான் மகன் நிர்வாண் கானும் வந்துள்ளார். கொரோனா தடுப்பு நடவடிக்கையாக விமான நிலையத்தில் அவர்களை பரிசோதித்த மருத்துவ குழுவினர் அவர்களை ஓட்டலில் தனிமைபடுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தி உள்ளனர்.
இதனை உதாசீனப்படுத்தி விட்டு 3 பேரும் தங்களது வீடுகளுக்கு சென்றுள்ளனர். இதுபற்றிய விவரம் அறிந்து 3 பேருக்கு எதிராக மும்பை பெருநகர மாநகராட்சி சார்பில் போலீசில் புகார் அளிக்கப்பட்டது.இதனை தொடர்ந்து, கொரோனா பாதுகாப்பு விதிகளை மீறிய குற்றச்சாட்டின் பேரில் சொஹைல் கான் உள்ளிட்ட 3 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். தற்போது சொஹைல் உள்பட 3 பேரையும் மும்பையில் உள்ள தாஜ் லேண்ட்ஸ் எண்ட் ஓட்டலில் அதிகாரிகள் தனிமைப்படுத்தி வைத்து உள்ளனர்.
அரசு விதிகளை மீறல், நோய் பரவலுக்கு காரணமாதல் உள்ளிட்ட பிரிவின் கீழ் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஒரு லட்சம் வரை அபராதமோ அல்லது 3 மாத சிறை தண்டனையோ விதிக்கப்படலாம் என்று போலீஸ் தரப்பு தகவல்கள் தெரிவிக்கிறது.