ஒரே படம் ஓஹோ வாழ்க்கை... கன்னாபின்னான்னு இழுக்கப்படும் பெயர் : கவலையில் கயாடு லோஹர் | சினிமாவில் 60வது ஆண்டை தொட்ட வெண்ணிற ஆடை மூர்த்தி | ஜெயமோகன் படத்துக்கு இந்த நிலையா? | வில்லனாக மாறிய சேரன் | டான்ஸ் ஆட வெச்சிட்டாங்க : பிரபு நெகிழ்ச்சி | ஹரி ஹர வீரமல்லுவுக்காக 5 ஆண்டுகள் வேறு படங்களில் நடிக்காத நிதி அகர்வால் | பாலிவுட்டில் தடம் பதிப்பாரா ஜூனியர் என்டிஆர் | மோசடி வழக்கை சட்டப்படி சந்திப்பேன் : சாம் சி.எஸ் | பூமிகா ஆசை நிறைவேறுமா? | ஹீரோ இல்லாமல் நடந்த 'ஹரிஹர வீரமல்லு' பட விழா |
உலகமே எதிர்பார்த்து காத்துக்கிடக்கும் அவதார் படத்தின் இரண்டாம் பாகம் நாளை வெளிவருகிறது. பல நாடுகளில் பிரிமியர் ஷோ, ஸ்பெஷல் ஷோ என இப்போதே களைகட்ட ஆரம்பித்து விட்டது. கடந்த வாரமே முன்பதிவுகள் தொடங்கி விட்டது.
இந்த நிலையில் படத்தின் இயக்குனரும், தயாரிப்பாளர்களில் ஒருவருமான ஜேம்ஸ் கேமரூனுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் கலந்து கொள்வதாக இருந்த பிரிமியர் ஷோ உள்ளிட்ட எந்த நிகழ்ச்சியிலும் அவர் பங்கேற்க முடியவில்லை.
இதுகுறித்து கூறிய அவர் கூறும்போது “ஜப்பான் புரமோசன் நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு டோக்கியோவில் இருந்து அமெரிக்கா திரும்பியபோது கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டது. நான் தனிமைப்படுத்தப்பட்டு விட்டேன். பல ஆண்டுகளாக பல நண்பர்களிடம் பிரியமியர் ஷோவில் சந்திப்போம் என்ற கூறியிருந்தேன். இப்போது அது நடக்காமல் போய்விட்டது. நாம் ஒன்று நினைத்தால் கடவுள் ஒன்று நினைக்கிறார்” என்கிறார் ஜேம்ஸ் கேமரூன்.