இப்ப, தமிழ் சினிமாவில் டாப் 5 ஹீரோயின் யார் தெரியுமா? | சூர்யாவின் ‛கருப்பு' ரிலீஸ் எப்போது? | ராஷ்மிகாவின் ‛மைசா' படத்தில் இணையும் புஷ்பா 2 வில்லன் | பராசக்தி படப்பிடிப்பு முடிவடைந்தது | நவம்பர் 21-ல் ரீரிலீஸ் ஆகும் ப்ரண்ட்ஸ் | லாபத்தில் முதலில் நுழைந்த 'பைசன்' | தீபாவளிக்கு ஜனநாயகன் அப்டேட் ஏனில்லை | பொங்கலுக்கு நடிகர் சங்க கட்டடம் திறப்பு : விஷால் திருமணம் எப்போது | பிக்பாஸில் வந்து விட்டால் மட்டும் நடிகையாகி விட முடியாது: தர்ஷிகா | ஹீரோயின் ஆனார் 'அரண்மனை' ஹர்ஷா |
இயக்குனர் மணிரத்னம்(66) தனது படைப்புகளால் இந்திய அளவில் பேசப்பட்டவர். தற்போது கல்கியின் சரித்திர நாவலான பொன்னியின் செல்வன் படத்தை இயக்கி உள்ளார். இரண்டு பாகங்களாக உருவாகி உள்ள இந்த படத்தின் முதல்பாகம் செப்., 30ல் தமிழ் உள்ளிட்ட 5 மொழிகளில் வெளியாகிறது. பொன்னியின் செல்வன் படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளில் ஈடுபட்டு இருந்தார் மணிரத்னம்.
இந்நிலையில் மணிரத்னத்திற்கு கொரோனா அறிகுறி தென்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இதனால் அவருக்கு கொரோனா என முதலில் தகவல் பரவியது. ஆனால் மருத்துவமனையில் மேற்கொண்ட பரிசோதனையில் அவருக்கு கொரோனா ரிசல்ட் நெகட்டிவ் என வந்துள்ளது. இருப்பினும் கோவிட் அறிகுறி தென்பட்டதன் காரணமாக மருத்துவமனையில் தங்கியிருந்து சிகிச்சை பெற உள்ளார். ஓரிரு நாளில் அவர் வீடு திரும்புவார் என தெரிகிறது.