2025 கூகுள் சர்ச் : 3வது இடத்தில் 'கூலி' | வா வாத்தியார் படத்தின் டிரைலர் வெளியானது | மலேசியாவில் ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்த அஜித் | ஜனநாயகன் படத்தின் சாட்டிலைட் உரிமையை வாங்கிய ஜீ தமிழ் | டிசம்பர் 9 முதல் 'அரசன்' படப்பிடிப்பு : சிம்பு கொடுத்த தகவல் | ஜி.வி.பிரகாஷின் அடுத்த படம் ஹேப்பிராஜ் | கடந்த சில வாரங்களாக காற்று வாங்கும் தமிழ் சினிமா | புதுமுகங்களின் மாயபிம்பம் | மீண்டும் நாயகியாக நடிக்கும் ரக்சிதா | அவதார் புரமோசன் நிகழ்வில் அர்னால்ட் |

நட்சத்திரம் நகர்கிறது படத்தை அடுத்து ஞானவேல் ராஜாவின் ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கும் விக்ரம் 61 வது படத்தை இயக்கப் போகிறார் பா.ரஞ்சித். ஜிவி. பிரகாஷ் இசையமைக்கும் இந்த படம் கேஜிஎப்பில் 19ம் நூற்றாண்டில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்ட கதையில் உருவாகிறது. நாயகி உள்ளிட்ட மற்ற நடிகர்கள் தேர்வு நடந்தது வருகிறது.
இந்த நிலையில் விக்ரம் 61வது படத்தில் நாயகியாக ராஷ்மிகா மந்தனா நடிப்பதாக கூறப்படுகிறது. கார்த்தி நடித்த சுல்தான் படத்தில் தமிழில் அறிமுகமான ராஷ்மிகா, தற்போது விஜய்யுடன் வாரிசு படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். விக்ரம் 61 படத்தில் கிளாமர் அல்லாத ஒரு மாறுபட்ட வேடத்தில் ராஷ்மிகா நடிப்பதாக கூறப்படுகிறது.