தெலுங்கில் மகேஷ்பாபுவின் உறவினருக்கு ஜோடியாக அறிமுகமாகும் ரவீனா டாண்டன் மகள் | 15 நாட்கள் கிடையாது.. 5 நாட்கள் தான் ; வா வாத்தியார் தயாரிப்பாளர் கெடுபிடி | நான் இப்போ சிங்கிள் : மூன்றாவது கணவரை பிரிந்த பிறகு நடிகை மீரா வாசுதேவன் அறிவிப்பு | கவுரவ ஆஸ்கர் விருது பெற்ற டாம் குரூஸ் | இரண்டு பாகங்களாக உருவாகும் பிரபாஸின் பவுஸி | வாரணாசி பட வில்லன் பிருத்விராஜ் ஹாலிவுட் பட பாதிப்பா? | விஜய்சேதுபதியா... துருவ் விக்ரமா... மணிரத்னம் சாய்ஸ் யார்? | விஷால் இயக்கி நடிக்கும் 'மகுடம்' படப்பிடிப்பு நிறைவு | ரஜினி படத்தை தனுஷ் இயக்குவாரா? | ப்ரண்ட்ஸ் ரீ ரிலீஸ் விழா : படக்குழு ஆப்சென்ட் |

பிரபல பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சனும், நடிகை ஐஸ்வர்யாராயும் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். இருவரும் இணைந்து பல படங்களில் நடித்தார்கள். திருமணத்திற்கு பிறகு அந்த அளவிற்கு இணைந்து நடிக்கவில்லை. கடைசியாக 2010ம் ஆண்டு வெளிவந்த ராவண் படத்தில் இருவரும் இணைந்து நடித்தார்கள். இதனை மணிரத்னம் இயக்கியிருந்தார்.
அதன்பிறகு தற்போது 8 ஆண்டுகளுக்கு பிறகு இருவரும் இணைந்து நடிக்கிறார்கள். படத்திற்கு குளோப்ஜாமுன் என்று டைட்டில் வைத்திருக்கிறார்கள். இதனை அனுராக் காஷ்யப் தயாரித்து இயக்குகிறார்.
குலாப்ஜாமுன் கதையை ஒரு வருடத்திற்கு முன்பே அனுராக் காஷ்யப், அபிஷேக், ஐஸ்வர்யா இருவரிடம் கூறி ஒப்புதல் பெற்றிருந்தார். ஆனால் இருவரும் வெவ்வேறு படங்களில் பிசியாக இருந்ததால் நடிக்கவில்லை. இப்போது இருவரும் தேதி ஒதுக்கி கொடுத்திருக்கிறார்கள்.
ஐஸ்வர்யா மற்ற நடிகர்களுடன் நெருக்கமாக நடிப்பது அபிஷேக்கிற்க பிடிக்கவில்லை. இதனால் இருவரும் பிரிந்து விட்டார்கள் என்றெல்லாம் செய்திகள் வந்து கொண்டிருந்த நிலையில் இருவரும் இணைந்து நடிக்க இருப்பது அந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது. இதன் படப்பிடிப்புகள் விரைவில் தொடங்க உள்ளது.