ஹைதராபாத்தில் அனிருத் நடத்தும் 'கூலி' இசை நிகழ்ச்சி! | ரியல் பிரபாஸூடன் நடித்த நிதி அகர்வால்! | ஜீவாவின் 46வது படத்தை இயக்கும் கே.ஜி.பாலசுப்பிரமணி! | ஆகஸ்ட் 29ல் தனது பிறந்த நாளில் குட் நியூஸ் வெளியிடும் நடிகர் விஷால்! | கமலின் 237வது படத்தில் நடிக்கும் கல்யாணி பிரியதர்ஷன்! | நீண்ட இடைவெளிக்குப் பிறகு திரைக்கு வரும் அதர்வாவின் தணல்! | நாளை ரீரிலீஸ் ஆகும் பாட்ஷா படம்! | இயக்குனர் வேலு பிரபாகரன் காலமானார் | ஓடிடியில் இந்த வாரம் ரிலீஸ் என்ன...? : ஒரு பார்வை! | போலீசார் மீதான மரியாதை அதிகரித்துள்ளது : திரிதா சவுத்ரி |
பாஜிராவ் மஸ்தானி படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு ரன்வீர் சிங் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‛பெபிகர்'. ரன்வீருடன் வாணி கபூர் நடித்திருக்கிறார், ஆதித்யா சோப்ரா இயக்கியுள்ளார். இந்தவாரம்(டிச.,9-ம் தேதி) ரிலீஸாகவிருக்கும் பெபிகர் படம் பற்றியும், அதில் நடித்த அனுபவம் பற்றியும் ரன்வீர் சிங் கூறியிருப்பதாவது...
பெபிகர் படம் பற்றி சொல்லுங்க.?
மிகவும் ஜாலியான, ரசிகர்கள் விரும்பும் ஜனரஞ்சகமான படமாக பெபிகர் இருக்கும். படம் மிகவும் மாடர்னாக இருப்பது போன்று தோன்றும், ஆனால், பக்கா இந்திய படம். படத்தில் அழுவது போன்றே காட்சியே இருக்காது, சிரிப்புக்கு பஞ்சமிருக்காது. ஒருவரியில் சொல்ல வேண்டுமென்றால் இந்தாண்டின் மிகப்பெரிய பொழுதுபோக்கு படமாக இது இருக்கும், நிச்சயம் படம் பார்ப்பவர்களுக்கு ஒரு புத்துணர்ச்சி இருக்கும்.
முதன்முறையாக இயக்குநர் ஆதித்யா சோப்ராவுடன் பணியாற்றுவது பற்றி சொல்லுங்க.?
வெற்றி - தோல்வி நம் கையில் கிடையாது. ஆனால் ஒவ்வொரு படத்திற்கும் நான், எனது முழு உழைப்பையும் தருகிறேன். பெபிகர் படம் வித்தியாசமான படம் எல்லாம் கிடையாது, சாதாரணமான ஒரு படம் தான். ஆதித்யா சோப்ராவுடன் பணியாற்றியது எனக்கு கிடைத்த பெருமை. ஏனென்றால் ஷாரூக்கானுக்கு பிறகு அவரது படத்தில் நடிப்பது நான் தான். படம் நன்றாக இருந்தால் நிச்சயம் வெற்றி பெறும், இல்லையென்றால் பெறாது. ஆதித்யாவிற்கு மிகவும் பிடித்தமான படம் பெபிகர்.
படத்தில் உங்க ரோல் பற்றி சொல்லுங்க.?
தரம் என்ற ரோலில் நடிக்கிறேன். அழகான, ஜாலியான இளைஞன். பெண்கள் என்றால் அவனுக்கு மிகவும் பிடிக்கும். எதையும் வெளிப்படையாக பேசக்கூடிய கேரக்டர் எனதுடையது. உண்மையை சொல்ல வேண்டுமென்றால் தரம் கேரக்டர், எனது ரியல் வாழ்க்கையில் நிறைய விஷயங்களில் ஒன்றிப்போய் உள்ளது.
உங்களை பற்றி வரும் கிசுகிசுக்கள் எப்படி எடுத்து கொள்வீர்கள்.?
சில பத்திரிகையாளர்கள் செய்திகளை என்னிடம் உறுதி செய்யாமல் வெளியிடுவது வருத்தமளிக்கிறது. ஒருகாலத்தில் வதந்திகள் வரும்போது மிகவும் கோபப்படுவேன். ஆனால் இப்போது அப்படியில்லை, மிகவும் கவனமாக அதை கையாண்டு வருகிறேன். இன்னும் சொல்லப்போனால் சமீபகாலமாக இதுபோன்ற செய்திகளை எல்லாம் நான் படிப்பதே கிடையாது, அதற்கான நேரமும் எனக்கு இல்லை. ஆனால் எனது நலம் விரும்பிகள் அவ்வப்போது ஏதாவது செய்தியை என்னிடம் சொல்வார்கள். கடந்த 6 ஆண்டுகளில் நான் கற்றுக்கொண்ட ஒரு விஷயம், இதுபோன்ற விஷயங்களில் நான் கவனம் செலுத்தினால் என்னால் சினிமாவில் கவனம் செலுத்த முடியாது என்பது தான். ஆகவே, வதந்திகள் பற்றி நான் கவலைப்படுவது கிடையாது. அதேசமயம் நான் மக்களுக்கு நன்கு தெரிந்த முகம் என்பதால் என்னைபற்றி வரும் சில செய்திகள் வருத்தம் அளிக்கிறது. என் பெயரை வைத்து யாரோ பொய்யான செய்தியை பரப்பி வருகின்றனர்.
உங்களுக்கு மிகவும் பிடித்த படங்கள் பற்றி சொல்லுங்க.?
என் மனதுக்கு பிடித்த படங்கள் நிறைய உள்ளன. ஆனால் அவற்றில் ஒரு படம் எனக்கு மிகவும் பிடித்தமானது, அந்தப்படம் ‛லூதிரா'. லூதிரா மிகவும் சவாலான, வித்தியாசமான படம். இந்தப்படம் கமர்ஷியல் ரீதியாக வெற்றி பெறவில்லை என்றாலும், அந்தப்படத்தில் நான் நடித்ததை பெருமையாக கருதுகிறேன். இன்னும் 15 - 20 ஆண்டுகள் சென்றால் கூட லூதிரா படத்தை எப்போதும் ரசிப்பேன். என் சினிமா வாழ்க்கையில் லூதிரா படத்திற்கு எப்போதும் தனியிடம் உண்டு.
உங்கள் எனர்ஜியின் ரகசியம் என்ன.?
தெரியவில்லை, ஆனால் என் ரசிகர்களின் அன்பும் வாழ்த்தும் என்னை எனர்ஜியாக மாற்றுகிறது. மேலும் நான் புகைப்பிடிப்பதோ, மது அருந்துவதோ கிடையாது, இதுவும் என் ஆரோக்கியத்தின் ரகசியம் என்று நினைக்கிறேன்.