பராசக்தி படத்தை வெளியிட தடையில்லை : நீதிமன்றம் உத்தரவு | பத்து நாள் ராஜாவாக சதீஷ் | சிறிய படங்களின் பிரச்னைகள் தீருமா? | ஜனநாயகன் டிரைலர் நாளை(ஜன., 3) வெளியீடு | புத்தாண்டை முன்னிட்டு எத்தனை படங்களின் அப்டேட் வந்தது தெரியுமா ? | தியேட்டர்களை எதிர்த்து ஓடிடியில் வெளியான 'சல்லியர்கள்' | தெலுங்குக்கு முன்னுரிமை தரும் நயன்தாரா | 2026 கோடை விடுமுறையில் திரைக்கு வரும் விஷாலின் 'மகுடம்'! | காதலருடன் பிரேக்ப்பா? வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த பிரியா பவானி சங்கர்! | அருள் நிதியின் 'டிமான்டி காலனி -3' படத்தின் போஸ்டர் வெளியானது! |

பாலிவுட்டில் நம்பர் 1 நடிகராக இருப்பவர் சல்மான் கான். சமீபத்தில் நடந்த 2.O படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீட்டு நிகழ்ச்சியில் பங்கேற்றார் சல்மான் கான். ரஜினிக்காகத்தான் இந்த விழாவிற்கு சல்மான் வந்தார் என்று இங்குள்ள அனைவரும் நினைத்திருக்க பாலிவுட்டில் வேற மாதிரியான செய்தி வெளியாகியுள்ளது. அதாவது சல்மான் உண்மையிலேயே ரஜினிக்காக வரவில்லையாம், எமிக்காகத்தான் வந்தார் என்று கூறப்படுகிறது.
இதைப்பற்றி சமீபத்தில் நடந்த ஒரு இதழ் வெளியீட்டு விழாவில் பங்கேற்ற எமியிடம் , சல்மான் உங்களுக்காகதான் விழாவிற்கு வந்தார் என்று ஒரு செய்தி வெளியாகியுள்ளது. நீங்கள் சல்மான் உடன் டேட்டிங் போகிறீர்களா...? என்று கேட்கப்பட்டது, இதற்கு எமி ஜாக்சன் கூறியதாவது... சல்மான் உடன் டேட்டிங் போக யாருக்குதான் விருப்பம் இருக்காது. ஆனால் நான் யாரையும் டேட்டிங் செய்யவில்லை, சிங்களாகத் தான் இருக்கிறேன்" என்றார்.