சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! | மே 1ம் தேதி ரீ ரிலீஸாகும் தீனா படம்! |
பாலிவுட்டின் பழம்பெரும் நடிகரான சசிகபூர் சுவாச கோளாறு காரணமாக மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளன. இவருக்கு வயது 76.
கடந்த சில நாட்களாக சளி தொல்லையால் அவதிப்பட்டு வந்த அவருக்கு சுவாச கோளாறு ஏற்பட்டதன் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
உலக புகழ்பெற்ற இந்திய நடிகர்களில் ஒருவரான சசிகபூர் 160 படங்களில் நடித்துள்ளார். இவர் இதுவரை 3 முறை தேசிய விருது பெற்றுள்ளார். 2010ம் ஆண்டு பிலிம்ஃபேரின் வாழ்நாள் சாதனையாளர் விருதையும் பெற்றுள்ளார். இவருக்கு 3 குழந்தைகள் உள்ளனர்.