Birthday
18 Mar 1938 (Age )
1960-80களில் பாலிவுட்டின் சூப்பர் ஸ்டாராக வலம் வந்தவர் நடிகர் சசி கபூர். கபூர் குடும்பத்திலிருந்து வந்த மற்றொரு நடிகர் இவர். 1938ம் ஆண்டு மார்ச் 18ம் தேதி பிறந்த இவர், உதவி இயக்குநராக தன் திரைபயணத்தை தொடர்ந்தார். பிறகு 1961ம் ஆண்டு தர்மபுத்ரா என்ற படத்தின் மூலம் நடிகராக உருவெடுத்த சசி கபூர் தொடர்ந்து பல படங்களில் நடித்து முன்னணி நடிகராக உயர்ந்தார். 1960-70 மற்றும் 80களில் டாப் நடிகராக திகழ்ந்தார் சசி கபூர். சுமார் 100-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள சசி கபூர், 1958ம் ஆண்டு ஜெனிபர் கெந்தல் என்பவரை மணந்து கொண்டார். இவர்களுக்கு குணால் கபூர், கரன் கபூர், சஞ்சனா கபூர் என மூன்று வாரிசுகள். மூவரும் திரைத்துறையில் இருக்கிறார்கள். பத்மபூஷண் விருது, 3முறை தேசிய விருது, பிலிம்பேர் விருதுகள் மற்றும் பல விருதுகளை பெற்றுள்ளார் சசி கபூர்.