இசைஞானி இளையராஜாவின் மூத்த வாரிசு கார்த்திக் ராஜா. 1973ம் ஆண்டு ஜூன் 29ம் தேதி பிறந்த கார்த்திக் ராஜா, சின்ன வயதிலேயே இசையின் மீது அதிக ஆர்வம் கொண்டவர். இருந்தாலும் இசையை முறைப்படி பயின்றார். டி.வி.கோபாகிருஷ்ணன் மற்றும் வி.தக்ஷ்ணாமூர்த்தியிடம் முறைப்படி இசை பயின்றார். அப்பா இளையராஜாவுடன் இணைந்து பல படங்களில் பணியாற்றினார். ரஜினி நடித்த பாண்டியன் படத்தில் ஒரு பாட்டை கார்த்திக்ராஜா தான் இசையமைத்தார். தொடர்ந்து இதுபோன்று ஒரு ஒரு பாடலுக்கு இசையமைத்தவர், அலெக்ஸாண்டர் படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். தொடர்ந்து உல்லாசம், காதலா காதலா, டும் டும் டும், ஆல்பம் உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைத்தார். பிறகு ஆல்பம், பின்னணி இசையில் மட்டும் கவனம் செலுத்தி வந்த கார்த்திக் ராஜா ஒரு சிறிய இடைவௌிக்கு பிறகு மீண்டும் முழுவீச்சில் இசையமைப்பில் இறங்கினார். மேரே ஜான் ஹிந்துஸ்தான், ஹவுலா ஹவுலா, இந்திய அன்லிமிடட்டு உள்ளிட்ட சில ஆல்பங்களுக்கும் இசையமைத்துள்ளார். ராஜ ராஜேஸ்வரி என்ற பெண்ணை 2000ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.