ஜனநாயகன் படத்தின் சாட்டிலைட் உரிமையை வாங்கிய ஜீ தமிழ் | டிசம்பர் 9 முதல் 'அரசன்' படப்பிடிப்பு : சிம்பு கொடுத்த தகவல் | ஜி.வி.பிரகாஷின் அடுத்த படம் ஹேப்பிராஜ் | கடந்த சில வாரங்களாக காற்று வாங்கும் தமிழ் சினிமா | புதுமுகங்களின் மாயபிம்பம் | மீண்டும் நாயகியாக நடிக்கும் ரக்சிதா | அவதார் புரமோசன் நிகழ்வில் அர்னால்ட் | தமிழ் படத்தில் மாலத் தீவு நடிகை | பிளாஷ்பேக்: பக்தி படத்தில் விஜயகாந்த் | பிளாஷ்பேக்: வில்லத்தனத்தில் மிரட்டி, வறுமையில் வாடிய நடிகை |

மாணிக்கம், அலெக்சாண்டர், உல்லாசம், பிசாசு- 2 உள்பட பல படங்களுக்கு இசையமைத்தவர் கார்த்திக் ராஜா. இளையராஜாவின் மூத்த மகனான இவர் அடுத்த மாதம் 24ம் தேதி திருச்சியில் ‛பொன்மாலைப் பொழுது' என்ற பெயரில் ஒரு இசை நிகழ்ச்சியை நடத்த உள்ளதாக அறிவித்திருக்கிறார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தியில், இந்த பொன் மாலை பொழுது நிகழ்ச்சியில் இளையராஜா மற்றும் என்னுடைய இசையில் உருவையான பாடல்கள் மட்டுமே பாடப்படும். ராயல்டி பிரச்னைகள் இருப்பதால் யுவன் சங்கர் ராஜாவின் பாடல்கள் இடம்பெறாது என்று தெரிவித்திருக்கிறார். மேலும், இந்த நிகழ்ச்சியில் ஹரிஹரன், சாதனா சர்க்கம் ஆகியோர் பங்கேற்றாலும் ஹிந்தி பாடல்கள் கண்டிப்பாக இடம் பெறாது. தமிழ் பாடல்கள் மட்டுமே முழுக்க முழுக்க இடம்பெறும் என்று தெரிவித்திருக்கும் கார்த்திக் ராஜா, இந்த நிகழ்ச்சியில் பங்குபெறும் வாத்திய கலைஞர்கள் அனைவருமே தமிழகத்தைச் சார்ந்தவர்கள் என்றும் அவர் அறிவித்திருக்கிறார்.




