தங்கலான் படத்திற்காக அதிகம் மெனக்கெட்டேன்: மனம் திறந்த மாளவிகா மோகனன் | திருமணம், குழந்தை பெற்றுக் கொள்வதுதான் முழுமையான வாழ்க்கையா : சமந்தா கேள்வி | ஸ்வீட் ஹார்ட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | மணிரத்னத்துடன் எடுத்த போட்டோ : ராஜ்குமார் பெரியசாமி நெகிழ்ச்சி | வெளியானது 'விடாமுயற்சி' படம்: ரசிகர்களுடன் படம் பார்த்த திரை பிரபலங்கள் | பிளாஷ்பேக் : படப்பிடிப்பிற்கே வந்து நடிகையை கடத்த முயன்றவர்களை அடித்து துரத்திய கொச்சின் ஹனீபா | தான் நடத்திய வழக்கை படமாக இயக்கும் வழக்கறிஞர் | கேரளாவில் இருந்து நடந்தே வந்து விஜய்யை சந்தித்த ரசிகர் | ராஷ்மிகாவுக்கு உதவி செய்யாத விஜய் தேவரகொண்டா ; நெட்டிசன்கள் கண்டனம் | திலீப் படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்கும் மோகன்லால் |
ஹரி - ஹரிஸ் இயக்கத்தில் சமந்தா முதன்மை வேடத்தில் நடித்துள்ள படம் ‛யசோதா'. உன்னி முகுந்தன், வரலட்சுமி ஆகியோரும் நடித்துள்ளனர். அதிரடி ஆக் ஷன் கதையில் உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து மற்ற பணிகள் நடக்கின்றன. இந்நிலையில் செப்., 9ல் அன்று மாலை 5:49 மணிக்கு படத்தின் டீசர் வெளியாகிறது. அன்றைய தினமே படத்தின் புதிய வெளியீட்டு தேதியும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக கடந்த ஆக., 12லேயே படம் ரிலீஸாவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நிறைவடையாததால் ரிலீஸ் தேதியை தள்ளி வைத்தனர்.