கவனமாக எழுதப்பட்ட திரைக்கதை : நடிகை வழக்கின் தீர்ப்பு குறித்து பார்வதி கருத்து | தாதா சாஹேப் விருது பெற்ற மோகன்லாலை பேட்ரியாட் படப்பிடிப்பு தளத்தில் கவுரவித்த மம்முட்டி | நடிகர் திலீப் விடுதலை குறித்து மலையாள நடிகர் சங்கம் கருத்து | தி கேர்ள் பிரண்ட் படத்தை கட்டாயம் பாருங்கள் : ஜான்வி கபூர் | சிரஞ்சீவி, நயன்தாராவின் காதல் பாடல் வெளியானது | டிசம்பர் 12ல் ஓடிடிக்கு வரும் காந்தா | தர்மேந்திராவின் 90வது பிறந்தநாள் : ஹேமமாலினி உருக்கம் | பவுன்சர்கள் செயல் : மன்னிப்பு கேட்ட சூரி | 10 வருடங்களுக்குப் பிறகு இரண்டாம் தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பித்த சூர்யா குடும்பம் | டிசம்பர் 12ல் 'அகண்டா 2'வை வெளியிட தீவிர முயற்சி |

ஸ்ரீதேவி மூவிஸ் சார்பில் சிவலெங்க கிருஷ்ண பிரசாத் தயாரிக்கும் படம் யசோதா. ஹரி-ஹரிஷ் இணைந்து இயக்குகிறார்கள். இப்படத்தில் சமந்தா முதன்மை பாத்திரத்தில் நடிக்க வரலட்சுமி சரத்குமார், உன்னி முகுந்தன், ராவ் ரமேஷ், முரளி ஷர்மா, சம்பத் ராஜ், சத்ரு, மதுரிமா, கல்பிகா கணேஷ், திவ்யா ஸ்ரீபாதா, பிரியங்கா ஷர்மா மற்றும் பலர் நடிக்கின்றனர். மணி ஷர்மா இசையமைக்கிறார் சுகுமார் ஒளிப்பதிவு செய்கிறார். தற்போது இந்த படத்தின் பணிகள் முடிவடைந்து விட்டது.
இதுகுறித்து தயாரிப்பாளர் சிவலெங்க கிருஷ்ண பிரசாத் கூறியதாவது: இப்படத்தை எந்த சமரசமும் இல்லாமல் மிகப்பெரிய பட்ஜெட்டில் பிரமாண்டமாக தயாரித்து வருகிறோம். இதுவரை 100 நாட்கள் படப்பிடிப்பு நடந்துள்ளது. படத்தின் அனைத்து படப்பிடிப்பு பணிகளும் முடிந்துவிட்டது. இம்மாதம் 15ஆம் தேதி முதல் டப்பிங் பணிகள் தொடங்குகிறது. மற்ற மொழிகளுக்கான டப்பிங் பணியை ஒரே நேரத்தில் முடிக்க திட்டமிட்டுள்ளோம்.
இந்த பான்-இந்தியப் படத்தை பெரிய அளவில் ரசிகர்களிடம் கொண்டு சேர்க்க முடிவு செய்துள்ளோம். படத்தை அனைத்து மொழிகளிலும் பிரமாண்டமாக வெளியிட திட்டமிட்டு வருகிறோம். சமந்தா இப்படத்தில் மிக அற்புதமாக நடித்துள்ளார் அதிலும் , குறிப்பாக ஆக்ஷன் காட்சிகளில், முழு அர்ப்பணிப்பையும் தந்து அசத்தியுள்ளார். தெலுங்கு, தமிழ், ஹிந்தி, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் இப்படம் வெளியாகும்.
இவ்வாறு அவர் கூறினார்.