ஆக.,14ல் 'கூலி' ரிலீஸ்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு | ஜிவி பிரகாஷ், சைந்தவி விவாகரத்து வழக்கு: செப்.25ல் நேரில் ஆஜராக உத்தரவு | சத்யராஜ், காளி வெங்கட் இணைந்து நடிக்கும் 'மெட்ராஸ் மேட்னி' | மே மாதத்தோடு விஜய்யின் 'ஜனநாயகன்' படப்பிடிப்பு முடிவடைகிறது! | சோபிதா துலிபாலாவின் அடுத்த தமிழ் படம்! | ரேஸ் காரை ஓட்டும் அஜித்தின் மகன் ஆத்விக்! வைரலாகும் வீடியோ!! | எதிர்பார்த்ததை விட பாசிட்டிவான விமர்சனங்கள் - விக்ரம் வெளியிட்ட வீடியோ! | பரபரப்பில்லாமல் இன்றைய வெளியீடுகள் | ஆறு மாதங்கள் தள்ளிப் போனது 'இட்லி கடை' | கார் பார்க்கிங் பிரச்னை : பிக்பாஸ் பிரபலம் தர்ஷன் கைது |
சந்திரபாபு பிலிம் பேக்டரி நிறுவனம் சார்பில் சாரத் இயக்கி, நாயகனாக நடித்து, பாடல்கள் எழுதி, தயாரித்துள்ள படம் 'தெற்கத்தி வீரன்'. கதாநாயகியாக அனகா நடித்துள்ளார். மற்றும் முருகா அசோக், நாடோடிகள் பரணி, கபீர் துக்கான் சிங், பவன், வேலா ராம்மூர்த்தி, மது சூதனன் ராவ், மாரி வினோத், குட்டி புலி ராஜ சிம்மன் உள்பட பலர் நடித்துள்ளனர். சண்முக சுந்தரம் ஒளிபரப்பு செய்துள்ளார். ஶ்ரீகாந்த் தேவா இசை அமைத்துள்ளார்.
படம் பற்றி இயக்குனரும், நடிகருமான சாரத் கூறியதாவது: தூத்துக்குடியில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை மையமாக வைத்து கமர்ஷியல் கலந்து இந்த படத்தை உருவாக்கியுள்ளோம். சமூகத்தின் மீது அக்கறை கொண்டுள்ள ஒவ்வொரு இளைஞனும் இந்த படத்தை பார்க்கும் போது, அவர்களையே திரையில் பார்ப்பது போல் இருக்கும். இன்றைய சூழலில் சமூகத்திற்கு தேவையான நல்ல விஷயங்களை வைத்து திரைக்கதையை உருவாக்கி உள்ளேன்.
சமூகத்தின் மீது அக்கறை கொண்டு எழுச்சியுறும் இளைஞர்களை அதிகாரவர்க்கம் எப்படியெல்லாம் ஒடுக்குகிறது என்பதை மக்களுக்கு வெளிச்சம் போட்டு காட்டும் படம். படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இம்மாத இறுதியில் திரையரங்குகளில் வெளியிட திட்டமிட்டுள்ளோம் என்றார் சாரத்.