ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
பாலிவுட்டின் கவர்ச்சி புயல் சன்னி லியோன், தனது கவர்ச்சியால் பாலிவுட் ரசிகர்களை மயக்கி வைத்துள்ளார். சமீபத்தில் ராகினி எம்எம்எஸ் 2 படத்தில் நடித்தவர், இப்போது வயதுவந்தோருக்கான காமெடி படமாக உருவாகி வரும் ''மஸ்திஜாதே'' என்ற படத்தில் நடித்து வருகிறார். இதுவரை இப்படத்திற்கு ஹீரோவே முடிவாகாமல் இருந்த நிலையில், தற்போது இப்படத்தில் துசார் கபூர் முக்கிய ரோலில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். ஏற்கனவே துசார், ''கயா கூல் ஹயின் ஹம்'' என்ற படத்தில் நிறைய இரட்டை அர்த்தம் தொடர்பான காமெடி ரோலில் நடித்து இருந்தார். அந்தப்படத்தில் அவரது நடிப்பை பார்த்து இப்போது மஸ்திஜாதே படத்தில் நடிக்க வைத்துள்ளார் இயக்குநர். மேலும் இப்படத்தில் இரண்டு ஹீரோக்கள் நடிக்க இருப்பதாகவும், அதில் ஒரு ஹீரோ துசார் கபூர் நடிப்பது உறுதியாகி இருப்பதாகவும், மற்றொரு ஹீரோவுக்கான தேடுதல் நடந்து வருவதாகவும் படத்தயாரிப்பு தெரிவித்துள்ளது.