என்னங்க பண்ணுறது, அப்படிதான் வருது : ‛எட்டுத் தோட்டாக்கள்' வெற்றி | வருத்தத்தில் கயாடு லோஹர் | ஜி.வி.பிரகாஷ் விட்டுக்கொடுத்த பல கோடி சம்பளம் | பாலிவுட்டில் வசூலைக் குவிக்கும் 'சாயரா' | 'நாட்டு நாட்டு' பாடகர் ராகுலுக்கு ரூ.1 கோடி பரிசு | நீண்ட இடைவெளிக்குப் பின் சினிமா பத்திரிகையாளர் சந்திப்பில் பவன் கல்யாண் | பாலிவுட்டுக்கு போன வேகத்திலேயே காதல் கிசுகிசுவில் சிக்கிய ஸ்ரீ லீலா! | ரேஸில் விபத்தில் சிக்கிய அஜித் கார்! | வெற்றிமாறன் தயாரித்த ‛பேட் கேர்ள்' படத்தின் டீசரை நீக்க உயர் நீதிமன்றம் உத்தரவு | 43வது பிறந்தநாளில் பிரியங்கா சோப்ரா வெளியிட்ட பிகினி புகைப்படம்! |
ஹிந்தியில் ஷாரூக்கான் நடிப்பில் கிங் என்ற படம் உருவாகி வருகிறது. இந்த படத்தின் சண்டைக் காட்சி மும்பையில் உள்ள கோல்டன் டெப்பாகோ ஸ்டுடியோவில் படமாக்கப்பட்டது. அப்போது ஸ்டன்ட் நடிகர்களுடன் ஷாரூக்கான் ஆக்ஷன் கட்சியில் நடித்துக் கொண்டிருந்தபோது அவருக்கு எதிர்பாராதவிதமாக லேசான அடிபட்டது. இதனால் கிங் படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டிருக்கிறது. மருத்துவர்கள் அவரை ஒரு மாத காலம் ஓய்வெடுக்க அறிவுறுத்தி உள்ளார்கள். மேலும் மேல் சிகிச்சைக்காக ஷாருக்கானை அமெரிக்காவிற்கு அழைத்து செல்கிறார்கள். அதனால் கிங் படத்தின் படப்பிடிப்பு அடுத்து செப்டம்பர் அல்லது அக்டோபரில் மீண்டும் தொடங்கும் என்கிறார்கள். சித்தார்த் ஆனந்த் இயக்கும் இந்த படத்தில் ஷாரூக்கானுடன் சுஹானா கான், அபிஷேக் பச்சன், அபய் வர்மா உள்ளிட்ட பல நடிக்கிறார்கள். இந்த படம் 2026 ஆம் ஆண்டு மே மாதம் திரைக்கு வருகிறது.