ஜெனிலியா எதிர்பார்க்கும் வேடம்... : மீண்டும் தமிழில் நடிக்க வருவாரா? | சினிமா டிக்கெட் கட்டணம் : கர்நாடகாவில் புதிய அறிவிப்பு | ஒரு பாடலுக்கு நடனமாடிய முன்னணி கதாநாயகிகள் : யார் நடனம் அசத்தல்? | சாணம் அள்ளிய கையில் தேசிய விருது: 'இட்லி கடை' அனுபவம் பகிர்ந்த நித்யா மேனன் | இப்ப, முருகன் சீசன் நடக்குது: இயக்குனர் வி.சேகர் | நடிகர் கார்த்தி கொடுத்த விருந்து: 'ஐ லவ் யூ' சொல்லி நெகிழ்ச்சி | சென்ட்ரல் பட விழாவில் சென்ட்ரல் ரயில்வே ஸ்டேஷன் நினைவுகள் | தமிழ் சினிமாவில் அடுத்தடுத்து திருமணங்கள்: கெட்டிமேள சத்தம் கேட்கப்போகுது | மேக்கப் குறித்து சரோஜாதேவி சொன்னது: இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார் புதுதகவல் | என் கருத்துக்களை திட்டமிட்டே சர்ச்சை ஆக்குகிறார்கள் : ராஷ்மிகா ஆதங்கம் |
கடந்த 2006ம் ஆண்டில் ஷாருக்கான், பிரியங்கா சோப்ரா நடித்து வெளிவந்த படம் 'டான்'. முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து டான் இரண்டாம் பாகத்திலும் ஷாருக்கான் நடித்து கடந்த 2011ம் ஆண்டில் வெளியாகி பெரும் வெற்றியை பெற்றது. இந்த இரண்டு பாகங்களையும் பர்ஹான் அக்தர் தயாரித்து, இயக்கினார்.
ஏற்கனவே பர்ஹான் அக்தர் டான் 3ம் பாகத்தில் ஷாருக்கானுக்கு பதிலாக நடிகர் ரன்வீர் சிங் ஹீரோவாக வைத்து இயக்குவதாக அறிவித்தார். இப்படத்திற்கு நம்ம ஊர் இயக்குனர்கள் புஷ்கர் காயத்ரி கூடுதல் திரைக்கதை எழுதுகின்றனர். ஏற்கனவே இந்த படத்தில் கதாநாயகியாக நடிப்பதாக கியாரா அத்வானியை அறிவித்தனர். ஒரு சில காரணங்களால் இந்த படத்திலிருந்து கியாரா அத்வானி சமீபத்தில் விலகினார். இதையடுத்து இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்க பாலிவுட் நடிகை கிர்த்தி சனோன் இணைந்துள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. இதன் படப்பிடிப்பை ஜனவரி மாதத்தில் தொடங்க திட்டமிட்டுள்ளனர். பெரும்பாலான படப்பிடிப்பை ஐரோப்பா நகரில் நடத்த இப்போது லொகேசன் தேடும் பணியில் படக்குழு ஈடுபட்டுள்ளது.