நடிகை கடத்தல் வழக்கு : மெமரி கார்டு விசாரணையில் இருந்து விலகிய நீதிபதி | சுகன்யாவுக்கு 30 வருடம் கழித்து நீதிமன்றத்தில் கிடைத்த ஆறுதல் தீர்ப்பு | செவிலியர்களின் உடையில் மாற்றம் வேண்டும் : கங்கனா ரணாவத் | வாகா எல்லையில் ஏஆர் ரஹ்மானின் இசை நிகழ்ச்சி | பின்னணி குரல் கொடுத்துவிட்டு கண்கலங்கிய எம்.எஸ்.பாஸ்கர் | 3 பட வெற்றி விழாவுக்காக தயாராகும் படக்குழுவினர் | வெற்றியை தேடி ஓடாதீங்க... திறமையை மேம்படுத்துங்க : மனோஜ் பாஜ்பாய் | ‛சிங் கீதம்' படம் என் 40 ஆண்டு கனவு : இயக்குனர் சிங்கீதம் சீனிவாசராவ் | ரஜினி, சிம்பு, பிரதீப்... : 3 படங்கள் வைத்திருக்கும் அஷ்வத் மாரிமுத்து | நோவா படத்தில் ஆக் ஷனில் ரைசா வில்சன் |

தமிழ் சினிமாவில் இரண்டு நடிகைகளுக்கு திருமணம் நடக்க உள்ளது. அதை அவர்களே தங்கள் சோஷியல் மீடியாவில் உறுதிப்படுத்தி இருக்கிறார்கள். ஒருவர் 'கபாலி, பரதேசி, மெட்ராஸ், ஒரு நாள் கூத்து' உள்ளிட்ட படங்களில் நடித்த ரித்விகா. இவர் பிக்பாஸ் போட்டியில் வெற்றியாளரும் கூட. இவருக்கும், வினோத் லட்சுமணன் என்பவருக்கும் விரைவில் திருமணம் நடக்க உள்ளது.
அதேபோல் பழம்பெரும் நடிகர் ரவிச்சந்திரன் பேத்தியும், 'கருப்பன், நெஞ்சுக்கு நீதி, அகிலன், ரசவாதி' ஆகிய படங்களில் நடித்தவருமான தான்யா ரவிசந்திரனுக்கும், விரைவில் டும்டும். இவர் ஒளிப்பதிவாளர் கவுதம் என்பவரை திருமணம் செய்ய உள்ளார்.

இதனிடையே தனது வருங்கால காதல் கணவரான கவுதம் உடன் லிப் லாக் கொடுக்கும் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் தன்யா ரவிச்சந்திரன். இந்த புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
ஆகஸ்ட் 29ல் விஷால், சாய் தன்ஷிகா திருமணமும் நடக்க உள்ளது.