மூன்றாவது குழந்தையை தத்தெடுத்த ஸ்ரீலீலா | 70 வருட காஞ்சிபுரம் பட்டு சேலையுடன் பூஜா ஹெக்டே போட்டோஸ் | அமலாக்கத் துறையிடம் அவகாசம் கேட்கும் மகேஷ் பாபு | நான் இப்போது சிங்கிள்: ஸ்ருதிஹாசன் | கேரளா தயாரிப்பாளர் சங்கம் வெளியிட்ட வசூல் விவரம், தமிழிலும் நடக்குமா ? | படம் வெளியாகும் முன்பே பாராட்டு பெறும் 'டூரிஸ்ட் பேமிலி' | ஓடிடியில் தமிழில் வரவேற்பு குறைந்த மோகன்லாலின் 'எம்புரான்' | 'ஜெயிலர்' வசூலை தாண்டுமா 'குட் பேட் அக்லி' | மணிரத்னம் இயக்கத்தில் மீண்டும் நடிக்கும் சிம்பு! | மீண்டும் வாடிவாசல் தள்ளிப்போகிறதா? ரெட்ரோ படத்தின் புரமோஷனில் அடுத்த படத்தை அறிவித்த சூர்யா! |
பாலிவுட்டின் பிரபல நட்சத்திர வாரிசு நடிகர் ரன்பீர் கபூர் கடந்த வருடம் வெளியான அனிமல் படத்தின் வெற்றி மூலம் ஆயிரம் கோடி வசூலை நெருங்கிய இளம் பாலிவுட் நடிகர் என்கிற பெயரையும் பெற்றவர். சமீபத்திய பேட்டி ஒன்றில் தனக்கும் ஐஸ்வர்யா ராய்க்கும் இருக்கும் நட்பு பற்றி கூறியுள்ளார் ரன்பீர் கபூர். தான் சிறுவயதில் அதாவது பத்தாம் வகுப்பு முடித்திருந்த காலகட்டத்தில் தனது தந்தை ரிஷி கபூருக்கு உதவியாக அவர் முதன் முதலாக டைரக்ட் பண்ணிய படத்தில் பணியாற்றியபோது அதில் கதாநாயகியாக நடித்த ஐஸ்வர்யா ராய் தன்னை ஒரு சிறுவன் என நினைக்காமல் நண்பனாகவே பழகினார் என்று கூறியுள்ளார் ரன்பீர் கபூர்.
இதுபற்றி மேலும் அவர் கூறும்போது, “அந்தப்படத்தில் பணியாற்றும் போது படப்பிடிப்பு தளத்தில் ஓய்வு நேரங்களில் எப்போதும் என்னுடன் தான் ஐஸ்வர்யா ராய் பேசிக் கொண்டிருப்பார். பள்ளிக்கூடம் செல்லும் சிறுவன் தானே என்று என்னை நினைத்ததில்லை. அவரைப் பற்றிய பல தகவல்களை என்னிடம் பகிர்ந்து கொள்வார். அதன் பிறகு கிட்டத்தட்ட 17 வருடங்கள் கழித்து நான் நடித்த ஏ தில் ஹே முஸ்கில் என்கிற படத்தில் அவர் நடித்த போது கூட சிறுவயதில் என்னை எப்படி நடத்தினாரோ, பழகினாரோ அதேபோலத்தான் பழகினார். இத்தனை வருடங்களில் அவரிடம் எந்த மாற்றத்தையும் பார்க்க முடியவில்லை” என்று ஆச்சரியத்துடன் கூறியுள்ளார்.