தமிழ் சினிமாவின் 3 மாதங்கள்…. வசூல் 300 கோடி மட்டுமே…. | இயக்குனர் மணிகண்டன் ஏன் பேசவில்லை | கர படத்தை தமிழகத்தில் வெளியிடும் ரெட் ஜெயன்ட் நிறுவனம் | பாய்ஸ் படத்தை ரீ ரிலீஸ் செய்ய தயாரிப்பாளர் திட்டம் | ரசிங்க, விமர்சனம் செய்யாதீங்க : திஷா பதானி | ‛சிறை' அனிஷ்மாவின் மூன்றாவது தமிழ் படம் | எனக்கு கிடைத்த இரண்டு சகோதரர்கள் : பவன் கல்யாண் மனைவி நெகிழ்ச்சி | ரசிகர்களை உற்சாகப்படுத்த தியேட்டர்களில் வெளியாகும் திரிஷ்யம் 2 | டில்லியில் ஹேமமாலினியின் பாதங்களைத் தொட்டு வணங்கிய பாலகிருஷ்ணா | ‛ப்ரோ 2' ஸ்கிரிப்ட் ரெடி : பவன் கல்யாணின் கிரீன் சிக்னலுக்கு காத்திருக்கும் சமுத்திரக்கனி |

100 கோடி, 200 கோடி, 500 கோடி, 1000 கோடி வசூல் என கடந்த சில வருடங்களாக இந்திய அளவில் சில பல படங்களின் வசூல் விவரங்கள் எந்தப் பக்கம் திரும்பினாலும் கேட்டுக் கொண்டிருக்கின்றன. அதில் எது உண்மை, எது பொய் என்பது குறித்து சம்பந்தப்பட்டவர்களுக்கு மட்டுமே தெரியும்.
ஆனால், சமூக வலைத்தளங்களில் 'டிராக்கர்கள்' என சொல்லிக் கொண்டு பலரும் பல்வேறு விதமான பொய்த் தகவல்களையே கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். அதனால், ரசிகர்களுக்கு இடையே சமூக வலைத்தளங்களிலும் கடும் சண்டை நடந்து வருகிறது. சமயங்களில் குறிப்பிட்ட படத்தின் தயாரிப்பாளர் சொல்லும் வசூல் கூட பொய்யான தகவல் என்றும் சர்ச்சை எழுந்துள்ளது.
இதற்கெல்லாம் அதிகாரப்பூர்வமாக சம்பந்தப்பட்ட சங்கங்கள் சொன்னால் கூட நம்பலாம். அந்த விதத்தில் மலையாள சினிமா உலகில் கேரளா திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் மலையாளப் படங்களின் வசூல் விவரங்களை வெளியிட்டுள்ளது..
கடந்த மார்ச் மாதத்தில் வெளியான படங்களின் பட்ஜெட், அதன் மூலம் கிடைத்த பங்குத் தொகை ஆகியவற்றை வெளியிட்டுள்ளார்கள். அதன்படி மோகன்லால் நடித்து வெளிவந்த 'எம்புரான்' படம் 175 கோடியே 66 லட்சம் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படம் என்றும், அதன் மூலம் முதல் 5 நாட்களில் 24 கோடியே 65 லட்சம் பங்குத் தொகை கிடைத்தது என்ற விவரமும் அளிக்கப்பட்டுள்ளது. அவர்கள் வெளியிட்ட 15 படங்களின் பட்ஜெட், பங்குத் தொகையில் இதுதான் அதிகமானது.
இது போன்ற விவரத்தை தமிழ்த் திரையுலகத்திலும் அளித்தால் தேவையற்ற சண்டைகள், சர்ச்சைகள் வருவது நின்று போகும். செய்வார்களா ?.