மே 23ல் ‛படை தலைவன்' ரிலீஸ் | பிளாஷ்பேக்: தொடர்கதையாக வந்து பின் சினிமாவான “தியாக பூமி” | தனது கனவுப்படமான 'மகாபாரதம்' அப்டேட் கொடுத்த ராஜமவுலி | மூன்றாவது குழந்தையை தத்தெடுத்த ஸ்ரீலீலா | 70 வருட காஞ்சிபுரம் பட்டு சேலையுடன் பூஜா ஹெக்டே போட்டோஸ் | அமலாக்கத் துறையிடம் அவகாசம் கேட்கும் மகேஷ் பாபு | நான் இப்போது சிங்கிள்: ஸ்ருதிஹாசன் | கேரளா தயாரிப்பாளர் சங்கம் வெளியிட்ட வசூல் விவரம், தமிழிலும் நடக்குமா ? | படம் வெளியாகும் முன்பே பாராட்டு பெறும் 'டூரிஸ்ட் பேமிலி' | ஓடிடியில் தமிழில் வரவேற்பு குறைந்த மோகன்லாலின் 'எம்புரான்' |
சசிகுமார், சிம்ரன், யோகிபாபு நடித்து அபிஷன் ஜீவிந்த் இயக்கி மே 1ம் தேதி திரைக்கு வரும் திரைப்படம் 'டூரிஸ்ட் பேமிலி'. இந்த திரைப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த திரைப்படத்தின் பிரத்யேக காட்சி ஒன்று பிரபலங்களுக்கு சமீபத்தில் போடப்பட்டது. இந்த திரைப்படத்தை பார்த்த அனைவரும் வெகுவாக பாராட்டி உள்ளனர். இதனால் இந்த திரைப்படம் வெளியாகும் முன்பே வரவேற்பை பெற்றுள்ளதால் திரையரங்கில் வெளியாகும்போது இன்னும் பெரிய வரவேற்பை பெற்றுத்தரும் என்பதே பலரின் கருத்தாக நிலவுகிறது. இப்படத்திற்கு தணிக்கை குழு 'யூ' சான்றிதழ் வழங்கியுள்ளது. மேலும் படத்தின் நீளம் 2 மணிநேரம் 6 நிமிடங்கள் என்ற தகவலும் வெளிவந்துள்ளது.