கோர்ட் உத்தரவை மீறி பேட்டி : மன்னிப்பு கேட்ட ரவி மோகன் | சென்னையில் தான் இருக்கிறேன், ஐதராபாத்தில் குடியேறவில்லை : ஐஸ்வர்யா ராஜேஷ் | ரேனிகுண்டா 2 படத்தின் முதல் பார்வை வெளியீடு | சூர்யாவை தொடர்ந்து அர்ஜூனுக்கும் வெற்றி : 50 கோடியை நெருங்கும் பிளாஸ்ட் | மஞ்சும்மல் பாய்ஸ் மாதிரி தமிழகத்தில் பாலன் ஓடுமா? | அரசன் படத்திற்காக 2 மாதங்களாக இரவில் நடக்கும் படப்பிடிப்பு | 'லிங்கம்' வெப் சீரீஸ் 26ம் தேதி வெளியாகிறது | இங்கிலாந்து மன்னரின் 'சர்' பட்டம் பெற்ற ஹாலிவுட் நடிகர் | பிளாஷ்பேக்: உடலால் வாழ்ந்து, உடலால் வீழ்ந்த உசிலைமணி | பிளாஷ்பேக்: முதல் பாகம் மலையாளத்தில், 2ம் பாகம் தமிழில் |

'எமர்ஜென்சி' படம் தொடர்பாக பாலிவுட் நடிகையும், பா.ஜ., எம்.பி.யு.மான கங்கனா ரணாவத்துக்கு சண்டிகர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
பாலிவுட் நடிகை கங்கனா ‛எமர்ஜென்சி' என்ற படத்தை இயக்கி, நடித்து, தயாரித்துள்ளார். முன்னாள் பிரதமர் இந்திராவின் வாழ்க்கையை தழுவி, அவரது காலத்தில் கொண்டு வரப்பட்ட அவசரநிலை பிரகடனத்தை மையமாக வைத்து இப்படம் உருவாகி உள்ளது. செப்., 6ல் படம் ரிலீஸ் என அறிவித்திருந்தனர். ஆனால் தணிக்கையில் சிக்கல், சீக்கிய அமைப்புகளின் மிரட்டல் போன்றவற்றால் படத்தின் ரிலீஸ் தள்ளிப்போய் உள்ளது.
இந்நிலையில் நடிகர் சங்கத்தின் முன்னாள் தலைவர் வக்கீல் ரவீந்தர் சிங் பாசி என்பவர் படத்தில் சீக்கியர்களின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்த முயன்றதாக கூறி மனு தாக்கல் செய்தார். 'சீக்கியர் சமூகத்திற்கு எதிரான பல பொய்யான குற்றச்சாட்டுகள் படத்தில் இடம் பெற்றுள்ளன எனக் கூறி கங்கனா மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று கூறினார். இதையடுத்து, கங்கனாவிற்கு சண்டிகர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. வழக்கின் அடுத்தக்கட்ட விசாரணை டிசம்பர் 5ல் மீண்டும் வருகிறது.