விஜயகாந்த் உடல்நிலை சீராக இல்லை : மருத்துவமனை அறிக்கை | வருத்தம் தெரிவிக்கிறேன் : பேட்டியில் ஆரம்பித்து அறிக்கையில் முடித்து வைத்த ஞானவேல்ராஜா | த்ரிஷாவிடம் மன்னிப்பு கேட்கவில்லை : மன்சூர் அலிகான் அடித்த அந்தர் பல்டி | நானி படத்திற்காக ஸ்ருதிஹாசன் உடன் இணைந்து பாடிய துருவ் விக்ரம் | 'பருத்தி வீரன்' பஞ்சாயத்து முழு கணக்கு விவரம்… | 'சலார்' கதை பற்றி சொன்ன இயக்குனர் பிரசாந்த் நீல் | 'குய்கோ'விற்கு உயிரோடு அஞ்சலி வைத்துவிட்டார்கள் - இயக்குனர் வருத்தம் | ஜெயம் ரவியை வைத்து இரண்டு இரண்டாம் பாக படங்களை இயக்கும் மோகன் ராஜா | படைப்பாளிகளை அவமதிக்கும் செயல் : ஞானவேல் ராஜாவிற்கு பாரதிராஜா கண்டனம் | ஹிந்தி படத்தை இயக்கும் அஜய் ஞானமுத்து |
சில ஆண்டுகளுக்கு முன்பு மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியான புலி முருகன் படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அந்த படத்தை இயக்குனர் வைசாக் இயக்கியிருந்தார். அதைத்தொடர்ந்து அவர் மம்முட்டியை வைத்து ஏற்கனவே தான் இயக்கிய போக்கிரி ராஜா படத்தின் இரண்டாம் பாகமான மதுர ராஜா என்கிற படத்தை இயக்கினார். அந்த படம் வரவேற்பை பெற தவறியது. அதைத் தொடர்ந்து அடுத்ததாக நடிகர் உன்னி முகுந்தனை வைத்து 'புரூஸ்லீ' என்கிற படத்தை இயக்குவதாக 2020லேயே அறிவிப்பு வெளியானது. இந்த படத்தை உன்னி முகுந்தனே தயாரிக்கிறார் என்றும் அறிவிக்கப்பட்டது.
அறிவிப்பு வெளியாகி மூன்று ஆண்டுகள் ஆன நிலையிலும் இந்த படம் எந்த வகையிலும் முன்னோக்கி நகராமல் அப்படியே நின்றது. இந்த நிலையில் தற்போது இந்த படம் கைவிடப்பட்டுள்ளதாக உன்னி முகுந்தன் அறிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறும் போது, “கதை உருவாக்கத்தில் ஏற்பட்ட கருத்து வித்தியாசங்கள் காரணமாக இந்த படம் கைவிடப்படுகிறது. அதே சமயம் இன்னொரு படத்திற்கான கதை விவாதமும் போய்க்கொண்டு இருக்கிறது” என்று கூறியுள்ளார்.
ஆனால் புரூஸ்லீ படத்தை அறிவித்த பிறகு இயக்குனர் வைசாக், மோகன்லாலை வைத்து 'மான்ஸ்டர்' என்கிற படத்தை இயக்கினார். அந்த படமும் தோல்வியை தழுவியதுடன் ரசிகர்களின் கேலி கிண்டல்களையும் சந்தித்தது. அதேசமயம் உன்னி முகுந்தன் தயாரித்து நடித்த மேப்படியான், மாளிகைப்புரம் ஆகிய படங்கள் மிகப்பெரிய வெற்றியை பெற்றன. இதனைத் தொடர்ந்தே தற்போது புரூஸ்லீ படத்தை கைவிடும் முடிவை உன்னி முகுந்தன் எடுத்துள்ளார் என்று சொல்லப்படுகிறது. இத்தனைக்கும் உன்னி முகுந்தனின் ஆரம்ப காலகட்டத்தில் அவரை வைத்து மல்லு சிங் என்கிற வெற்றி படத்தை இயக்குனர் வைசாக் கொடுத்திருந்தார் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.