என் கருத்துக்களை திட்டமிட்டே சர்ச்சை ஆக்குகிறார்கள் : ராஷ்மிகா ஆதங்கம் | பிளாஷ்பேக்: சிந்தைக்கும், செவிக்கும் விருந்தளித்த ஸ்ரீதரின் “சிவந்த மண்” | தனுஷை தொடர்ந்து நானியை இயக்கும் சேகர் கம்முலா | கூலி படம் இன்னொரு தளபதி : லோகேஷை கட்டிப்பிடித்து பாராட்டிய ரஜினி | சிவராஜ்குமாரை இயக்கும் தமிழ் இயக்குனர் | சாம் ஆண்டன் இயக்கத்தில் பிரபுதேவா, வடிவேலு | பவித்ராவுக்கு என்னாச்சு?: அவரே வெளியிட்ட விளக்கம் | மீண்டும் இணைந்த பிளாக் பட கூட்டணி! | இளையராஜா பாடலை பயன்படுத்த, வனிதாவுக்கு தடைவிதிக்க கோர்ட் மறுப்பு | விடைபெற்றார் நடிகை சரோஜாதேவி : சொந்த ஊரில் அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம் |
பாலிவுட்டின் முன்னணி நடிகர் அனுபம் கெர். பாலிவுட் சினிமாவில் அதிக படங்களில் நடித்தவர் என்ற பெருமை பெற்றவர். ஹீரோவாக சினிமா வாழ்க்கையை தொடங்கி வில்லன், குணசித்ரம், காமெடி என 500க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தற்போது அவர் தனது 538வது படத்தில் ரவீந்திரநாத் தாகூராக நடிக்கிறார்.
இதுபற்றி தனது சமூக வலைத்தளத்தில் தான் ரவீந்திரநாத் தாகூர் தோற்றத்தில் இருக்கும் படத்தை வெளியிட்டு அனுபம் எழுதியிருப்பதாவது “எனது 538வது படத்தில் குருதேவ் ரவீந்திரநாத் தாகூராக நடிப்பதில் மகிழ்ச்சி. உரிய நேரத்தில் விவரங்களை வெளியிடுவேன். அவரை திரையில் கொண்டு வரும் வாய்ப்பு கிடைத்தது என் பாக்கியம். இந்தப் படம் குறித்த கூடுதல் விவரங்களை விரைவில் உங்களுடன் பகிர்வேன்” என்று தெரிவித்துள்ளார்.
ரவீந்திரநாத் தாகூர் குறித்து ஏராளமான டாக்குமென்டரி படங்கள், குறும்படங்கள் வெளிவந்துள்ளன. 1961ம் ஆண்டு முழுநீள திரைப்படம் வெளியானது. இதில் பெங்காலி நடிகர் ராயா சட்டர்ஜி தாகூராக நடித்தார். சத்யஜித் ரே இந்த படத்தை இயக்கி இருந்தார். இந்திய அரசின் பிலிம் டிவிசன் இந்த படத்தை தயாரித்திருந்தது. தற்போது அனுபம் கெர் நடிப்பில் புதிதாக தயாராகிறது. தாகூர் வேடத்தில் அனுபம் கெர் நடிக்க கூடாது என்று எதிர்ப்பும் கிளம்பி வருகிறது.