தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

இந்திய வம்சாவளியை சேர்ந்த அமெரிக்க ராப் பாடகி ராஜகுமாரி. இந்திய மற்றும் சர்வதேச இசை உலகில் புகழ்பெற்றவர். பாலிவுட்டின் பிரபலமான சில நட்சத்திர நடிகர்களுக்கு தனது தனித்துவமான குரலையும் வழங்கி இருக்கிறார். பல சர்வதேச கலைஞர்களுடன் பணியாற்றி உள்ளார். கிராமி விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட பாடகிகளில் முக்கியமானர். தற்போது ஷாருக்கான், நயன்தாரா, தீபிகா படுகோன், விஜய் சேதுபதி நடிப்பில் அட்லி இயக்கத்தில் உருவாகி உள்ள 'ஜவான்' படத்தில் ராஜகுமாரி எழுதி, பாடி, ஆடிய 'கிங் கான்' ராப் ட்ராக், இடம் பெற்றுள்ளது. இதுகுறித்து ராஜகுமாரி சமூக ஊடகங்களில் ''தலைப்பு பாடலை எழுதவும், நடிக்கவும் என்னை அழைத்த அனிருத் மற்றும் ஷாருக்கானுக்கு நன்றி” என்று குறிப்பிட்டுள்ளார்.




